கண்ணால் காண்பது பொய்யென்று அலறுகிறார்கள் நில அமைப்பு ஆராய்ச்சியாளர்கள். உலக வரைபடம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது உண்மை அல்ல என்பது அவர்கள் வாதம். ‘அது உங்கள் கண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
ஏனென்றால் உருளையான உலகத்தை அப்படியே உட்கூடுடன் விரித்து வரையப்பட்ட வரைபடங்களையே நாம் பயன்படுத்துகிறோம்.
மேப்பில் அமெரிக்காவைவிட ரஷ்யா 4 மடங்கு மிகப்பெரியது போல் தோன்றுகிறதே, ஆனால் அமெரிக்காவைவிட ரஷ்யா 2.1 மடங்கே பெரியது.
அதுபோல் வட அமெரிக்க கண்டத்தில் மிகப்பெரிய நிலப்பரப்புடன் உள்ள நாடுபோல் கனடா தெரிந்தாலும், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்காவைவிட வெறும் 2 சதவிகிதம்தான் அதிகம்.
உலகின் வடமேற்கு மூலையில் இருக்கும் கிரீன்லாந்து, மேப்பில் பார்த்தால், ஆப்பிரிக்கா அளவு இருக்கும். ஆனால் நிலப்பரப்பின் அடிப்படையில் ஆப்ரிக்கா கிரீன்லாந்தைவிட 14 மடங்கு பெரியது.
ஆஸ்திரேலியா ஆப்பிரிக்காவில் பாதி போல இருந்தாலும் ஆஸ்திரேலியாவை விட 4 மடங்கு பெரியது. எனவே உலக மேப்பை வைத்து நாடுகளின் பரப்பளவு பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்கிறார்கள்.
அப்போ எங்க புவியியல் வாத்தியார் பொய் சொல்லிட்டாரா?