Video Call Video Call
Lifestyle

விண்வெளியில் இருந்து Video Call செய்த தந்தை - மகனின் நெகிழ்ச்சியான உரையாடல் !

"பூமியில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? என்று தந்தையிடம் மகன் கேட்க, அதற்கு "நீ தான்" என நெயாடி பதில் அளிக்கிறார்.

டைம்பாஸ் அட்மின்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் அண்மையில் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்தது. அந்த வீடியோவில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி, பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசுகிறார்.

இருவரும் பேசிக்கொள்ளும் போது, "பூமியில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? என்று தந்தையிடம் மகன் கேட்க, அதற்கு "நீ தான்" என நெயாடி பதில் அளிக்கிறார். மேலும், "பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதே போல் தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம்" என்றும் கூறினார். ஆகஸ்ட் 10ம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.