Sarfaraz Khan
Sarfaraz Khan டைம்பாஸ்
Lifestyle

Sarfaraz Khan : விக்ரம் வேதாவாக மாறிய சர்ஃப்ராஸ் கான், BCCI - ஒரு Run machine இன் கதை !

Ayyappan

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகள்ல ஆடப் போற இந்திய அணியில இடம்பெறும்னு பலரும் எதிர்பார்த்த பேருதான் சர்ஃப்ராஸ் கான்.

25 வயதே ஆன சர்ஃப்ராஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக ரஞ்சித் தொடர்ல நம்ப முடியாத வகையில ரன்களக் குவிச்சுட்டு இருக்காரு. 2019/20 சீசன்ல 928 ரன்கள், 2020/21ல அதையும் தாண்டி 982 ரன்கள், 2022/23ல ஆறே போட்டிகள்ல 556 ரன்கள்னு அடிச்சு வெளுத்துருக்காரு. Raining Cats and Dogsனு சொல்ற மாதிரி Raining Centuries and Half Centuries தான் சர்ஃப்ராஸின் கிளாஸான ஆட்டம்.

இத்தனை ரன்களை குவிச்சும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ல ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு சர்ஃப்ராஸுக்குக் கிடைக்கல. புஜாரா இல்லேனு முடிவு பண்ண பிசிசிஐ, அந்த இடத்துக்கு Domestic Format அடிப்படைல ஆள் எடுத்திருந்தா அதுல முதல் தேர்வா சர்ஃப்ராஸ்தான் வந்திருப்பாரு.

79.65ன்ற அவரோட First Class ஆவரேஜே அவருக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர டைப் பண்ணி இருக்கும். இதுவரை எந்த இந்திய Domestic வீரரும் வைக்காத ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆவரேஜ் இது. இன்னமும் சொல்லப் போனால் டான் பிராட்மேனோடு சராசரிக்கு அப்புறமா அதிகபட்ச ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆவரேஜ் சர்ஃப்ராஸோடதுதான். இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு பிசிசிஐ ரெட் பால் கிரிக்கெட் உலகத்துக்குள்ள ரெட் கார்பெட் விரிச்சு தான வரவேற்பு கொடுத்திருக்கணும்? ஆனா பிசிசிஐ அப்படி செஞ்சாங்களா?

டெஸ்ட் சாம்பியன்ஷிப்ல கூட ரிசர்வ் பிளேயரா டெஸ்டுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத சூர்யக்குமார் யாதவ்வை தேர்ந்தெடுத்தாங்க. ஆனா பேருக்குக் கூட சர்ஃப்ராஸை பத்தி பேசப்படவே இல்லை. இது பல ஆண்டுகளாக நடந்துட்டேதான் இருக்குது. சரி அப்படி என்னதான் சர்ஃப்ராஸ் கானுக்கும் பிசிசிஐக்கும் வாய்க்கால் தகராறுன்னு பார்த்தா "ஃபிட்னஸ் இல்ல", "ஆஃப் ஃபீல்டுல அவரோட நடவடிக்கைகள் சரியில்ல" அப்படின்னு வரிசை கட்டி புகார் பட்டியல பிசிசிஐ சொல்லுது.

தேர்வுக்குழு வாரியத்தோட முன்னாள் தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா ஒரு ரஞ்சிப் போட்டிக்கு போன போது, சதம் அடிச்ச பிறகு அவரை நோக்கி ஆக்ரோஷமாக விரல்களை நீட்டி சர்ஃப்ராஸ் கான் கொண்டாடிய விதம்தான் ஒரு காரணம்னு சொல்லப்படுது.

ஒரு கட்டத்துல Domestic கிரிக்கெட்ல சர்ஃப்ராஸும் ப்ரித்வி ஷாவும் கலக்குறதப் பார்த்து, இவங்க ரெண்டு பேருமே இந்தியக் கிரிக்கெட்டோட எதிர்காலமா இருப்பாங்கனு நம்பப்பட்டது. ப்ரித்வி ஷாவுக்காவது இந்திய அணில ஒருசில போட்டிகள்ல வாய்ப்புகள் தரப்பட்டு அதை அவர் சரியாக பயன்படுத்திக்காததால் நிராகரிக்கப்பட்டார். ஆனால், சர்ஃப்ராஸ் விஷயத்துல அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுது.

"கடை விரித்தேன் கொள்வாரில்லைனு" சொல்ற மாதிரி என்னதான் பிசிசிஐ உதாசீனப்படுத்துனாலும், இந்திய ஜெர்ஸி தராம இழுத்தடிச்சாலும், சர்ஃப்ராஸ் தன் மேல இருட்டடிப்பு நடக்க அனுமதிக்கல. தொடர்ந்து ரெட்பால் கிரிக்கெட்ல அடிக்கிற ஒவ்வொரு ஷாட் மூலமாகவும் தனக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மிகப்பெரிய கதவோட பூட்டை உடைச்சிட்டே இருக்காரு‌.

ஒரு கட்டத்தில் சர்ஃப்ராஸோட தொடர் போராட்டம் அவருக்கான வெற்றித் திலகத்தை இடும்னு உறுதியாக நம்பலாம்.