Lifestyle

'மெரினா சபதம் முதல் ஜிம் சபதம் வரை' - ஃப்ளாப் சபதங்களின் லிஸ்ட்

நம்மாளுக அடிக்கடி சபதம் எடுக்குற மோடுக்கு போய்டுவாங்க. புத்தாண்டுனு இல்ல, பொறந்த நாளு, திருமண நாளு, காதலர் தினம்னு சபதம் எடுக்குறதுக்கு நேரங்காலமே பாக்க மாட்டாங்க.

Aravindraj R

நம்மாளுக அடிக்கடி சபதம் எடுக்குற மோடுக்கு போய்டுவாங்க. புத்தாண்டுனு இல்ல, பொறந்த நாளு, திருமண நாளு, காதலர் தினம்னு சபதம் எடுக்குறதுக்கு நேரங்காலமே பாக்க மாட்டாங்க. அந்த வகையில ஃபளாப் ஆகும்னு தெரிஞ்சும் நாம எடுக்குற சபங்களோட லிஸ்ட்ட பாப்போம்.


ஜிம்முக்கு போறோம், ஜம்முனு ஆகுறோம் :


`இனிமே வடை, பஜ்ஜில ஆரம்பிச்சு, பீட்சா, பர்கர் வரைக்கும் கட் பண்றேன். வாரணம் ஆயிரம் சூர்யா டிபிய வாட்சப்ல வச்ச கையோட ஜிம்முக்கு போறேன். வயித்த பழனி படிக்கட்டு மாதிரி ஆக்கிக் காட்டுறேன்'னு சூளுரைப்பாங்க. கொஞ்ச நாள்ல ஜிம்முக்கு காசுக் கட்டுனதயே மறந்துட்டு, `தொப்பையைக் குறைக்க தினமும் வாக்கிங் போறேன்'னு சொல்லி கெளம்புவாங்க, நாலு கிலோமீட்டர் நடப்பாங்க.

சூர்யா
அப்புறம், ஒரு டீக்கடையா பாத்து, அஞ்சு பஜ்ஜி, மூனு உளுந்த வடைனு கட்டு வாங்க. அடுத்த நாள் நாலு கிலோ மீட்டர் மூணாகும், ரெண்டாகும், ஒன்னாகும். ஆனா பஜ்ஜி, வடை எண்ணிக்கை மட்டும் குறையாது.

பூரண மதுவிலக்கு :

'இனிமேல் குடிக்கவே கூடாதுடா சாமி'னு மங்காத்தா அஜித் மாதிரி நெட்டி முறிப்பாங்க. ஆனா, அன்னைக்கு நைட்டே, 'விளையாடு மங்காத்தா, ஆடாம ஜெயிச்சோமடா'னு பார்ட்டி மூடுக்கு போய்டுவாங்க. சிலர் ஒரு வாரத்துக்கு 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'னு ஸ்ட்ரிட்டா கடைப்பிடிப்பாங்க.

அப்புறம் முடியாம, 'யூ நோ ஒன் திங். சோசியலைஸ் ஆகுறதுக்கு ட்ரிங்கிங் இஸ் த மஸ்ட் ஒன்'னு பீட்டர் விட்டு, பழையபடி முறுங்கை மரம் ஏறிடுவாங்க.

ஓ.பன்னீர்செல்வம்

மெரினா சபதம் :

இதுதான் இருக்க சபதத்துலயே 'பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும்'னு மக்கள நம்ப வச்ச சபதம். பிரபல அரசியல்வாதிகள் மெரினா பீச்சுக்கு போய் சபதம் எடுக்குற பழக்கம் இப்பதான் சில வருஷங்களா தொடங்கிருக்கு. சிலர் தரைல அடிச்சு சபதம் எடுப்பாங்க. சிலர் தியானம் பண்ற மாதிரி சபதம் எடுப்பாங்க. ஆனா பாருங்க, நம்மூர் அரசியல்வாதிகள் சபதம் என்னைக்கு நடந்துருக்கு?