Netherland டைம்பாஸ்
Lifestyle

CWC 2023 : Delivery boy to Net Bowler - Netherland ஐ கலக்கும் சென்னை இளைஞனின் சுவாரஸ்ய கதை !

டைம்பாஸ் அட்மின்

நேற்று வரை ஃபுட் டெலிவரி பாயாக இருந்தவர், தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் நெட் பவுலராக மாறியது எப்படி.?

சென்னையைச் சேர்ந்த 29 வயதான லோகேஷ் குமார் தனது கல்லூரி படிப்பை 2018-ல் முடித்துள்ளார். பின், கிரிக்கெட்டில் முழு ஆர்வம் காட்டத் தொடங்கிய லோகேஷ், ஒரு பக்கம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஸ்விக்கி உணவு டெலிவரி செய்து கொண்டு வார இறுதியில் கிரிக்கெட் விளையாடும் பழக்கத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில், உலகக் கோப்பைக்கு தயாராகும் நெதர்லாந்து அணிக்கு ஒரு "ஸ்பின் பயிற்சி பவுலர்கள் தேவை" என்பது போன்று விளம்பரம் செய்துள்ளது.

இதனை தற்செயலாக பார்த்த  லோகேஷ் பின்பு அதற்கு பதிவும் செய்து உள்ளார். மேலும் நெதர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தியா முழுவதிலும் இருந்து செப்டம்பர் 19 அன்று, சுமார் 10,000 பவுலர்களுக்கு வீடியோ மூலம் தகுதி தேர்வு நடத்தியுள்ளது. அதில், தேர்வான நான்கு வீரர்களில் இடது கை சைனாமேன் பவுலராக லோகேஷும் தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து லோகேஷ் குமார் பேசுகையில், இந்த நேரம் என் கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷேன் நடத்தும் மூன்றாம் டிவிஷன் ஆட்டத்தில் கூட விளையாடியது இல்லை. கடந்த நான்கு வருடங்களாக ஐந்தாவது டிவிஷனில் மட்டுமே தான் விளையாடி வருகிறேன்.

இந்நிலையில், நெதர்லாந்து அணியின் நெட் பவுலராக தேர்வானது, என் திறமைக்கு கிடைத்த முறையான அங்கீகாரம் என்று உணர்கிறேன். மேலும், என்னை நெதர்லாந்து அணி வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர் மற்றும் வலைப்பந்து வீச்சாளர்கள் அறிமுக விழாவும் நடத்தினார்கள். அப்போது சில வீரர்கள் என்னிடம், "நீங்கள் தயங்க வேண்டாம். இது உங்கள் அணி போல நினைத்துக்கொள்ளுங்கள்" என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்" என்று லோகேஷ் கூறினார்.

- மு.குபேரன்.