Model: RCB Fan girl Timepass
Lifestyle

RCB Fangirl-ன் வட போச்சே மொமண்ட்! | Swiggy-யின் Thug கமெண்ட்!

சமீபத்தில் நடந்த ஆர்.சி.பி மற்றும் குஜராத் டைட்டன்ஸ்க்குமான போட்டி ரொம்ப உக்கிரமா போயிட்டு இருந்துச்சு. விராட் கோலி 101 ரன்கள் எடுத்தாரே... அதே மேட்ச்தான். ஒரு RCB ஃபேன்கேர்ள் இப்போ ட்ரெண்டாகிட்டாங்க.

விராட் கோலி ஆட்டம் இழக்காம 101 ரன்கள் எடுத்திருந்துமே, ஆர்.சி.பி அந்த மேட்ச்ல ஜெயிக்கல. இது ஆர்.சி.பி ஃபேன்ஸ் மத்தியில ஏமாற்றத்தயே கொடுத்துச்சு.

இந்த நிலைமயில மேட்ச் முடியறதுக்கு முன்னாடியே, ஆர்.சி.பி fan girl ஒருத்தர் 'ஆர்.சி.பி கண்டிப்பா இந்த மேட்ச் ஜெயிச்சுடும்'னு அவங்க தங்கி இருந்த ஹாஸ்டல்ல இருக்குற எல்லாருக்குமே ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்ல ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்காங்க. (அம்மணிக்கு அம்புட்டு நம்பிக்கை) ஆர்டர் வந்ததும் ட்ரீட் மேட்ச் முடியிறதுக்குள்ள கனஜோரா போயிட்டிருந்திருக்கு.

RCB fangirl's friend tweet

அதுக்கப்புறம் ய்ட்விஸ்ட்டே..! ஆர்.சி.பி fan girl எதிர்பார்க்காத மேட்ச் எண்டிங் தான் அது.  கடைசில ஆர்.சி.பி தோத்து,  குஜராத் டைட்டன்ஸ் அந்த மேட்ச்சை ஜெயிச்சு முதல் ரவுண்ட்லயே வெளியேறிடிடுச்சு.

 டெலிவரி வந்த ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை ப்ரக்ரித்தி என்ற அந்தப்பொண்ணோட ஹாஸ்டல்மேட் போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்காங்க. அந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன் பலவிதமா கமெண்ட்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க...

'இதெல்லாம் தூசு... இனிமேதான் மாஸு'ங்கிற மாதிரி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஐடில இருந்தே ஒரு கமெண்ட் போட்டு தெறிக்க விட்ருக்காங்க.

swiggy reply

ஆர்.சி.பி Fangirl ஆர்.சி.பி ஜெயிச்சிடும்னு எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணாங்க! 'இப்போ எல்லோரும் சேர்ந்து அவங்களுக்கு டிஷ்யூ பேப்பர் ஆர்டர் பண்ணுங்க'னு thug கமெண்ட் கொடுத்திருந்தாங்க ஸ்விக்கி நிறுவனம்.

ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு மொமண்ட்.

- நெ.ராதிகா