Google
Google timepass
Lifestyle

Google : ஒரு நாளில் 1 மணி நேரம் வேலை, ஆனால் ரூ. 1.2 கோடி சம்பளமா? | Devon

டைம்பாஸ் அட்மின்

ஓவர் நைட்ல ஒபாமா ஆன மாறி, ஒரு மணி நேரத்துல ஒரு கோடியா? ஆமாங்க! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும், “டெவோன்” என்ற புனைப்பெயரைக் கொண்ட இளைஞர், ஒரு நாளில் வெறும் ஒரு மணி நேரம் தான் வேலை பார்ப்பதாகவும், $150,000 (ரூ. 1.2 கோடி) ஆண்டு வருமானம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ‘ஃபார்ச்யூன்’ பத்திரிக்கையிடம் பேசியுள்ள அந்த இளைஞன், “நான் ஒரு நாள் முழுவதும் வேலைபார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல், இந்த ஆண்டின் இறுதியில் தனக்கு போனஸ் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார். 

மேலும், “நான் மிகவும் குறைந்த அளவே வேலை பார்க்கிறேன். எனது மூளைத் திறனை என் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.” ஃபார்ச்யூன் பத்திரிக்கை அந்த இளைஞரிடம் காலை 10 மணி அளவில் போன் செய்துக் கேட்டபோது, அவர் இன்னும் லேப்டாப்-பை திறந்து லாகின் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் மேனேஜரின் ஏதேனும் முக்கியமான மெசேஜை மிஸ் பண்ணிட மாட்டீங்களா என்று கேட்டதற்கு “அதனால் உலகம் ஒன்றும் முடிவடையப் போவதில்லை... இப்போது இல்லையென்றால் பிறகு இரவு நேரம்போல பார்த்துக்கொள்வேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வாரத்திற்கென்று தனக்குக் கொடுத்துள்ள வேலையை, மேனேஜருக்கு அனுப்புவதற்கு முன்பே, அதன் ‘கோடிங்’ வேலையை முதலில் முடித்து விடுவார் எனவும், அது அந்த வாரத்திற்கான நல்ல ஒரு தொடக்கமாக அமையும் என்றும் கூறியுள்ளார். காலை 9 மணியளவில் எழுந்து, காலை 11 மணி அல்லது மதியம் 12 மணி வரை, தான் வேலை செய்யும் நிறுவனத்திற்காக வேலை செய்துவிட்டு, பிறகு, தான் தொடங்க இருக்கும் ‘ஸ்டார்ட்- அப்’ நிறுவனத்திற்காக இரவு 9 அல்லது 10 மணி வரை வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.

கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்கள், கோவிட் நேரத்தில் நிறைய பணியாட்களை வேலைக்கு சேர்த்தது. ஏனென்றால் பணியாட்கள் வேறு எந்த நிறுவனங்களுக்கும் சென்று விட கூடாது என்பதற்காக இதனைச் செய்தது. அப்படி பணியில் சேர்ந்தவர்களுக்கு, நிறுவனத்தில் அவர்களின் வேலையோடு ஒப்பிடும் போது அவர்களுக்கான சம்பளம் மிக அதிகம். டெவோன் அந்த ஆயிரம் பேரில் ஒருவராக தன்னை நினைத்துக்கொண்டார். 

குறைவான நேரம் வேலை பார்த்தாலும், தனக்கான பணியை மிகக் கச்சிதமாக செய்து முடிக்கிறார் டெவோன். நாம் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. நமக்கான வேலையை நாம் எவ்வாறு மிகச்சரியாக செய்து முடிக்கிறோம் என்பதே மிக மிகமுக்கியம். அதற்கு டெவோன் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.

- ர. பவித்ரா.