Diamond  timepass
Lifestyle

Surat : 'பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு' - வைரத்தில் பல் செட் தெரியுமா? | Diamond Teeth

வாடிக்கையாளர்களுடைய விருப்பத்திற்கு தகுந்த மாதிரி எந்த அளவுக்கு தங்கம், எத்தனை வைரக் கற்கள் பயன்படுத்துறாங்களோ அதை பொருத்து 25-40 லட்ச ரூபாய் வரை இந்த பல்செட் செய்யறதுக்கு செலவாகும்.

ராதிகா நெடுஞ்செழியன்

வைரத்துல கம்மல் பார்த்திருப்போம் !நெக்லஸ் பார்த்திருப்போம் ! வளையல் பார்த்திருப்போம் ! மோதிரம் பார்த்திருப்போம் ஏன் பல் கூட பார்த்திருப்போம், ஆனா பல் செட் பாத்து இருப்போமா ??? இனிமே பாப்போம் !!!

வைர கற்களை வெட்டுறதுக்கும் அதுக்கு பாலிஷ் போடுறதுக்குமான நகரமா இருக்கிறது சூரத் நகரம் தான். இதனால தான் இந்தியாவுடைய வைர நகரம்னு சூரத் நகரத்த சொல்றாங்க. உலகளவுல 10-ல 8 வைரம் சூரத் நகரத்துலதா வெட்டப்பட்டு பாலிஷ் போட்டு விற்கப்படுது.

ஏதாவது ஒன்னு ரெண்டு பற்கள வைர கற்களா வெச்சி நாம பார்த்திருப்போம். ஆனால் மொத்த பல்லுமே வைர கற்களால் ஆன ஒரு வாய பார்த்திருப்போமா ?? இயற்கை, ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட மற்றும் மொய்சனைட் வைரங்களால அலங்கரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி 'பற்களை' இந்த நகரத்தில இருக்க நகைக்கடைக்காரர்கள் வடிவமைச்சிட்டு வராங்க..

வைரங்களால செய்யப்படுற இந்த பல்செட் செய்ய 25-40 லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த பல்செட் செய்ய, தங்கம், வெள்ளி தவிர 2000 வைரக்கற்கள பயன்படுத்துறதாவும் சொல்றாங்க. வாடிக்கையாளருடைய விருப்பத்திற்கு தகுந்த மாதிரி, கஸ்டமைஸ் பண்ணியும் இந்த பல் செட்ட செஞ்சி வித்துட்டு இருக்காங்க. வெள்ளி மற்றும் மோனோசைட் வைரங்களால செய்யப்பட்ற 6 பல் கொண்ட பல்செட்ட ரூபாய் 1 லட்ச ரூபாய் வரை விக்கிறதா சொல்றாங்க. தங்கம் மற்றும் லேப்ல பராமரிக்கப்படுற வைரங்களால் செய்யப்பட்ட பல்செட் ரூபாய் 5 லட்ச வர விலை போகுது...

அது மட்டும் இல்லாம வாடிக்கையாளர்களுடைய விருப்பத்திற்கு தகுந்த மாதிரி எந்த அளவுக்கு தங்கம், எத்தனை வைரக் கற்கள் பயன்படுத்துறாங்களோ அதை பொருத்து 25-40 லட்ச ரூபாய் வரை இந்த பல்செட் செய்யறதுக்கு செலவாகும்னு சொல்லி இருக்காங்க.

இப்படியே பல் செட்ட செஞ்சு வித்துட்டு இருந்தா, சூரத் சூப்பரா ஆயிடும் !!!