Captain Cool timepass
Lifestyle

Haryana : எட்டு வயது Captain Cool - Lift இல் சிக்கியும் சீரியஸாய் வீட்டுப்பாடம் செய்த சிறுவன் !

2 மணி நேரமாக அழாமல், பயப்படாமல் அசால்ட்டாக ஹோம் ஒர்க் செய்துள்ளான் கார்விட். மீட்கும்போதுகூட சின்ஸியராய் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த அவனைப் பார்த்து அங்கிருந்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

டைம்பாஸ் அட்மின்

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள oxame height society இல் வசித்து வரும் பவன் சண்டிலா என்பவரின் 8 வயது மகன் கார்விட். படிப்பில் சுட்டியான கார்விட் கடந்த 21-ம் தேதி மாலை டியூஷன் செல்ல நான்காம் மாடி குடியிருப்பில் இருந்து லிஃப்ட் மூலம் கீழே இறங்கினான்.

தரையிறங்கும்போது லிஃப்ட் பழுதாகியிருக்கிறது. இரண்டாம் தளத்தில் லிஃப்டுக்குள் சிக்கினான் அந்த சிறுவன். உதவிக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தான். உரக்க அழைத்தும், கதவுகளைத் தட்டியும் எவருக்கும் கேட்கவில்லை.

பயந்துபோன சிறுவன் தன் கவனத்தை திசை திருப்ப புத்தகங்களை எடுத்து வீட்டுப் பாடம் செய்யத் துவங்கி உள்ளான். கார்விட் டியூஷன் வரவில்லை என டியூஷன் டீச்சர் பெற்றோருக்கு கால் செய்த பின்னர் தான் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் லிஃப்ட்டுக்குள் கார்விட் மாட்டிக் கொண்டதைக் கண்டுபிடித்தனர்.

உடனடியாக தீயணைப்பு மீட்புப்பணித்துறைக்கு போன் செய்தனர் அவனது பெற்றோர். சுமார் 7 மணி அளவில் அங்கு வந்த தொழில்நுட்பக் குழுவினரின் உதவியோடு தீயணைப்புத்துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். 2 மணி நேரமாக அழாமல், பதட்டப்படாமல் குறிப்பாக பயப்படாமல் அசால்ட்டாக ஹோம் ஒர்க் செய்து முடித்துள்ளான் கார்விட்.

மீட்கும்போதுகூட சின்ஸியராய் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த அவனைப்பார்த்து அங்கிருந்த எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். இந்த ஆர்வத்தைக் கேள்விப்பட்ட லோக்கல் மீடியாக்கள் திடீர் செலிபிரட்டியாக்கி கார்விட்டை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.

'புயல் வரும்போது பூச்செண்டு கொடுப்பாய்' என்பது போல லிஃப்ட் நிற்கும்போது ஹோம் ஒர்க் செய்வாய்....புரியாத புதிர் நீ பையா!' எனப் பாடலாம்.

- செ.சிவரஞ்சனி.