இந்தியன் கிரிக்கெட் டைம்பாஸ்
Lifestyle

'Koffee with Modi' - இந்தியன் கிரிக்கெட் டீமுக்கு சில ஐடியாக்கள்

பௌலர்ஸையும் பேட்ஸ்மேன்களையும் ரெண்டு டீமா பிரிச்சி ‘வேர்ல்டு கப்பை ஜெயிப்பது எப்படி’னு நீயாநானா ஷோ பண்ணலாம்.

பாதுஷா

நம்ம கிரிக்கெட் டீமை எப்படில்லாம் அதுக்குத் தயார் பண்ணலாம்னு யோசிப்போம்.

பௌலர்ஸையும் பேட்ஸ்மேன்களையும் ரெண்டு டீமா பிரிச்சி ‘வேர்ல்டு கப்பை ஜெயிப்பது எப்படி’னு நீயாநானா ஷோ பண்ணலாம். சீஃப் கெஸ்டுகளாக ‘சென்னை 28’ பட டீமைக் கொண்டுவரலாம்.

பௌலர்களும் பேட்ஸ்மேன்களும் சரவணனும் மீனாட்சியும் போல் கோட்டும் கோபியும் போல் ஒன்றிணைந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும் என யாரையேனும் கூட்டிவைத்து சொற்பொழிவு நடத்தலாம்!

சிறந்த ஓப்பனர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த அறிமுக வீரர், பெஸ்ட் என்டர்டெயினர், பெஸ்ட் சப்போர்ட்டிங் ப்ளேயர் இப்படி தனித்தனி வகையில் விஜய் அவார்ட்ஸ் வழங்கப்படும்னு அறிவிக்கலாம்!

ஒருவேளை மொத்த டீமுமே சொதப்பிட்டாலும் ‘பப்ளிக் ஓட்டு போடும் ஆப்ஷன் வெச்சி எங்களை வைல்டு கார்டு மூலமா டைரக்டா ஃபைனலுக்கு செலெக்ட் பண்ணுங்க’னு கேட்டு ஐ.சி.சி-க்கே கடிதம் எழுதி டரியலாக்கலாம்!