Lifestyle

நாயிக்கு மட்டும் வாய் இருந்தா?

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரச்சனையப்பா.. பேசாம ஒரு நாயா பிறந்திருக்கலாம்னு நெனைக்கிறீங்களா நீங்க? அப்டினா இந்த கேள்விகள் எல்லாம் உங்களுக்குத்தான் சார்..

கொட்டாச்சி

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரச்சனையப்பா.. பேசாம ஒரு நாயா பிறந்திருக்கலாம்னு நெனைக்கிறீங்களா நீங்க? அப்டினா இந்த கேள்விகள் எல்லாம் உங்களுக்குத்தான் சார்..

கேள்வி 1:

காலையில் வாசல் தெளிக்கிறேன்ற பேர்ல எங்க மேல தண்ணி ஊத்தி எழுப்பி விட்டுத் தொறத்தி விடுறீங்களே.. விடியக்காலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சு, ஈசிஆர்ல சைக்லிங் போய், அத இன்ஸ்டா போஸ்ட்டாவா போட போறேன்? ராத்திரி பூராம் தூங்காமா உங்க வீட்டத் தான பாதுகாக்குறோம். எங்க பத்தரை மணி வரை தூங்குற உங்க பிள்ளை மேல தண்ணி ஊத்துங்க பார்ப்போம்?

கேள்வி 2:

மீந்துபோன சாப்பாடுனா எங்க தலைலதான் கட்டணும்னு விதி இருக்கா என்ன? நல்ல நாளு பொல்ல நாளுனு ஒரு நாளாவது நல்ல சோறு போட்டு இருக்கீயா? நீ எது போட்டாலும் திங்கிறதுக்கு நான் என்ன உன் புருஷனாம்மா?

கேள்வி 3:

நாவாட்டுக்கு தெருல கெடைக்கிறத தின்னுட்டு வயித்துப் பாட்ட பாத்துட்டிருந்தேன். 'அனிமல் லவ்வர்'ன்ற பேர்ல என் கூட்டியாந்து, வேளைக்கு மூனு இன்ஸ்டா போஸ்ட்டு, நாலு ரீல்ஸ்னு அம்புட்டு வேலை வாங்குற.. அர்னால்ட்னு பேரு வச்சியே, அரை வயித்து சோறாவது எனக்கு வச்சீயா?

கேள்வி 4:

நீ வீக் எண்ட் லீவுல நல்லா தூங்குறதுக்காக மதிய நேரம் உன் பசங்கள வெளிய வெளையாட அனுப்பி விட்டிற்ர, அதுங்க எங்கள கல்ல விட்டு அடிச்சு தொறத்தி விடுதுங்க. நான் தெரியாமதான் கேக்குறேன், நாங்கெல்லாம் செத்த கண்ணசரக் கூடாதா?

கேள்வி 5:

எவனையாவது திட்டணும்னா போதும் யோசிக்காம, "அறிவு கெட்ட நாயே, சோம்பேறி நாயே, நன்றி கெட்ட நாயே.."னு ஆரம்பிச்சுடுறீங்க. ஏன், "அறிவு கெட்ட அழகேஷு , சோம்பேறி சுரேஷு, நன்றி கெட்ட நரேஷு"னு திட்ட வேண்டிதான?

கேள்வி 6:

பணக்கார வீட்டுக்கு போறோம். வயிறார சாப்டலாம்னு பாத்தா, பாக்கெட்ல அடைச்சு வச்ச நொறுக்கு தீனியாப் போட்டு கொல்றீங்க.. இது போதா கொறைக்கு, பால் பாட்டில், பவுடரு, ஷாம்பு, சோப்பு, ட்ரவுசர் சட்ட, கண்ணாடி, தொப்பினு ராம நாராயணன் படத்துல வர அனிமல்ஸ் மாதிரி என்ன ஆக்கி வச்சுருக்கீங்களே ஏன்?

ம்ம்ம்.. பதில் சொல்லுங்க..lol லொள்...