Jadeja
Jadeja timepass
Lifestyle

IND vs AUS : சர்வதேச போட்டிகளில் Ravindra Jadeja வின் புதிய சாதனை !

டைம்பாஸ் அட்மின்

500 விக்கெட் வீழ்த்தியதோடு, 5 ஆயிரம் ரன்களையும் எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்தர ஜடேஜா. இந்த மைல் கல்லை எட்டும் 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட் என்ற சாதனையைத் தொட்டார். அதோடு, 500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார்.

இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு கபில்தேவ் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 63 டெஸ்ட் போட்டிகளில் 263 விக்கெட்டும், 171 ஒரு நாள் போட்டிகளில் 189 விக்கெட்டும், 64 இருபது ஓவர் போட்டிகளில் 51 விக்கெட்டும் என மொத்தம் சர்வதேச போட்டியில் 503 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார். கபில்தேவ், ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜேக் காலிஸ், போல்லாக் (தென் ஆப்பிரிக்கா), இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்ரிடி (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), சமிந்தா வாஸ் (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூ சிலாந்து), ஷகீப் அல் ஹாசன் (வங்காளதேசம்) ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் ஆவர்.