Kapil dev Kapil dev
Lifestyle

Ind vs Wi : 'Batsman வராங்க, Out ஆகுறாங்க, Repeat' - Westindies அணியை சுருட்டிய Kapil dev !

ஒரே இன்னிங்க்ஸ்ல 8 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 11வது வீரர்ன்ற சாதனையை கபில் தேவ் பண்ணார். கும்பளேவோட 10 விக்கெட்டுகள் சாதனை வரைக்கும் இதுதான் இந்திய பௌலரோட தலைசிறந்த ஸ்பெல்லாக பேசப்பட்டு வந்தது.

Ayyappan

ஃபாஸ்ட் பௌலர்களால கிரிக்கெட் உலகத்த சூறையாடுன வெஸ்ட் இண்டீஸாலயே கபில் தேவ்ன்ற ஃபாஸ்ட் மீடியம் பௌலரோட வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியல.

1971ஆம் வருஷம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரா தங்களோட முதல் டெஸ்ட் போட்டிய வென்ற இந்தியாவோட வளர்ச்சி அடுத்த சில வருஷங்கள்ல அபரிதமா இருந்துச்சு. இந்தியாவோட Spin Quartetனு சொல்லப்பட்ட நான்கு சிறந்த ஸ்பின் பௌலர்கள் பல வெளிநாட்டு போட்டிகள்ல கூட அணிய ஜெயிக்க வச்சுட்டு இருந்தாலும் ஃபாஸ்ட் பௌலிங் வலுவா இல்ல. புதுப் பந்த பழசாக்குற சம்பிரதாயத்துக்கு மட்டுமே அவங்க பயன்படுத்தப்பட்டாங்கன்ற நிலைமை தான் இருந்துச்சு.

நிலைமை அப்படியிருக்க இந்தியாவோட கபில் தேவ் பார்ட் டைம் பௌலரா, அதுவும் ஃபாஸ்ட் மீடியம் பௌலரா இருந்தாலும் பல போட்டிகள்ல இந்தியாவை வெல்ல வைக்குற ஸ்பெல்களை வீசியிருந்தாரு. அந்தக் குறிப்பிட்ட போட்டில இந்தியா ஜெயிக்கல தான். ஆனா அவர் எடுத்த 9 விக்கெட்டுகள் இந்தியாவோட ஆளுமைய ஆதிக்கத்த உணர வச்சது. ஒரு பெரிய நம்பிக்கையை அணிக்குள்ள கொண்டு வந்துச்சு.

1983-ம் வருட உலகக் கோப்பைய வென்ற இந்தியா மேல வெஸ்ட் இண்டீஸ் கொலை வெறில இருந்த சமயம். ஜுன்ல அது நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலவே ஆகியிருந்தாலும் அவங்களோட கோபம் தணியல. அந்த சமயத்திலதான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தாங்க. ஆறு டெஸ்ட்கள் கொண்ட தொடரை 3/0னும் ஒருநாள் தொடரை 5/0 னும் ஜெயிச்சு இந்தியாவை வாஷ் அவுட் பண்ணவும் செஞ்சாங்க. ஆனா அவ்வளவு பெரிய சம்பவத்துலயும் இருட்டடிப்பு செய்ய முடியாத மாதிரியான ஒரு பெர்ஃபார்மன்ஸ கபில்தேவ் பௌலிங்ல பண்ணாரு.

ஆறாவது டெஸ்ட்ல கவாஸ்கர் 236 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ், ஒருநாள் போட்டில விவியன் ரிச்சர்ட்ஸ் - க்ரீனிட்ஜோட 221 ரன்கள் பார்ட்னர்ஷிப்னு அசத்தலான விஷயங்கள எல்லாம் அசால்ட்டா தூக்கி சாப்பிட்டுச்சு கபில் தேவோட அந்த ஒரு ஸ்பெஷல் ஸ்பெல்.

தொடரோட முதல் போட்டிய வெஸ்ட் இண்டீஸ் வென்று இரண்டாவது போட்டி டிராவாகி இருக்க மூன்றாவது போட்டி அஹ்மதாபாத்ல நடந்துச்சு. 281 ரன்களை முதல் இன்னிங்ஸ்ல அடிச்ச வெஸ்ட் இண்டீஸ இரண்டாவது இன்னிங்ஸில 201 ரன்களுக்கு சுருட்டுனார் ஹரியானா ஹரிகேன்.

வெஸ்ட் இண்டீஸ் பக்கத்துல தேஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் விக்கெட்டை மட்டும்தான் இந்தியாவோட பால்வீந்தர் சந்து எடுத்தாரு. மத்த எல்லா விக்கெட்டுகளையும் வீசிய 30.3 ஓவர்கள்ல கபில் தேவ் சுருட்டிட்டாரு.

"வந்தாங்க, ஆட்டமிழந்தாங்க, போனாங்க, ரிபீட்"னு டைம் லூப் சுழற்சில சிக்குன மாதிரி வரவும் போகவுமா பேட்ஸ்மேன்கள் தடுமாற 201 ரன்களுக்குள் மொத்த பேட்டிங் படையும் பெவிலியன் திரும்பிடுச்சு. ஒரே இன்னிங்க்ஸ்ல எட்டு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 11-வது வீரர்ன்ற சாதனையை கபில் தேவ் அந்தப் போட்டியில பண்ணாரு. அனில் கும்பளேவோட 10 விக்கெட்டுகள் ஹால் வரைக்கும் இதுதான் ஒரு இந்திய பௌலரோட தலைசிறந்த ஸ்பெல்லாக பேசப்பட்டு வந்தது. தொடர் மொத்தத்துலயும் 29 விக்கெட்டுகள அசாத்தியமாக கபில் வீழ்த்தியிருந்தாரு.

வைக்கப்பட்ட 241 ரன்கள் டார்கெட்டை அடிக்க முடியாம இந்தியா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், கபில் தேவோட இந்த மேஜிக் ஸ்பெல் எவ்வளவு காலம் ஆனாலும்கூட நினைவு கூரத்தக்க ஒன்றுதான்.