Ind vs Eng timepass
Lifestyle

Ind vs Eng : Test இல் T20 batting ! - அதிரடியான Bazball என்றால் என்ன?

டைம்பாஸ் அட்மின்

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட்டை பொறுத்தவரை பெரும்பாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 90ஸ் காலகட்டத்தில் இருந்ததைப் போல் தற்போது ரசிகர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பு இல்லை. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகள் என்றாலே 5 நாட்கள் செல்லும் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று கருதுகின்றனர்.    

இருப்பினும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் என்றாலே தனி ரசிகர்கள் பட்டாலும் உண்டு. ஏனெனில் இரு அணி வீரர்களுக்கு இடையே ஏற்படும் சிறிய வாக்குவாதம், ஆக்ரோச பந்துவீச்சு, அதிரடி பேட்டிங் என்று அடுக்கடுக்காக கூறிக்கொண்டு செல்லலாம். 

அனைவரின் கவனமும் இந்திய அணி இங்கிலாந்து அணி பேஸ்பால் முறையை எதிர்த்து எவ்வாறு விளையாடப் போகிறது என்றே உள்ளது. 

ஆமாம் இந்த பேஸ்பால் என்றால் என்ன?   

பேஸ்பால் என்பது பொதுவாக தாங்கள் வெற்றி பெறுவதை மட்டுமே குறிகோளாகக் கொண்டு, அசுர பலத்துடன் எத்தகைய முயற்சியையும் தயங்காமல் எடுத்து அதிரடியாக விளையாடும் முறை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. அதையே இங்கிலாந்து அணியும் தங்களின் விளையாட்டு யுக்தியாக கையில் எடுத்துள்ளது.

'பாஸ்பால்' என்ற சொல் இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளரின் பெயரான பிரெண்டன் மெக்கல்லத்திலிருந்து வந்தது. "பாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட பிரெண்டன் மெக்கல்லம், விளையாடும் நாட்களில் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியும் அதே நோக்கத்துடன் விளையாடுகிறது. இங்கிலாந்து அணி போட்டியின் போது தங்கள் நிலையைப் பெரிதாக பொருட்படுத்தாமல் எதிரணியிடம் அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்துகின்றன.

மெக்கலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர்போனவர் என்பதால், அவர் இந்த யுக்தியை பயிற்சியாளராக பொறுப்பேற்றவுடன் ஸ்டோக்குடன் சேர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் அணுகுமுறையில் புகுத்தியுள்ளார். மேலும் இந்த அணுகுமுறை ஒரு சில போட்டிகளுக்கு நல்ல முடிவை கொடுத்தாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்விக்கு வித்திட்டது. மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக பேஸ்பால் அணுகுமுறை இருப்பதால் இம்முறை கடும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரையும் கைபற்றாமல், 2-2 என சமனில் முடிந்தது. ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.

ஆனால், தங்களின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அட்டாக்கிங் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களால் வெற்றி பெற முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், வருங்காலங்களில் இதே அணுகுமுறையை அனைத்து போட்டிகளிலும் கையாள்வோம் எனக் கூறியிருக்கிறார்.

இந்த முறைக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு பேஸ்பால் யுக்தி கை கொடுக்காது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இங்கிலாந்து அணி எவ்வளவு காலம் 'பாஸ்பாலை' உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதைப் பார்ப்போம்..!

- மு.குபேரன்.