நகைச்சுவையும் நகைச்சுவை சார்ந்த இடங்களும்னு கிரிக்கெட் நடக்குற இடங்களைப் பட்டியலிட்டா அதுல பல சமயங்களில் செய்தியாளர்கள் சந்திப்பும் இடம் பெறும்.
ஃபீல்டுலயும் டிரெஸ்ஸிங் ரூம்லயும் ஒரு கேப்டன் நடந்துக்குற விதத்தைப் போலவே எப்படி ஒரு செய்தியாளர் சந்திப்புல நடந்துக்குறாங்கன்றதும் ரொம்ப முக்கியம். அது வெறும் ஸ்ட்ராடஜி பத்தியும் டீம் காம்பினேஷன் பத்தியும் தெரிவிக்கிற இடமோ, வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ற இடமோ மட்டுமில்ல, அதுக்கும் மேல. தங்களோட அணியோட வானிலை எப்படியிருக்கு, ஒரு படுதோல்விக்குப் பிறகு எந்தளவு வீரர்கள் மன தைரியத்தோட இருக்காங்க அப்படின்ற Mind Reader இந்த ப்ரஸ் கான்ஃபரன்ஸ்கள்.
தோனி இதுல எக்ஸ்பர்ட். அவரோட போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன் மட்டுமில்ல செய்தியாளர்கள் சந்திப்பும் கூட அவ்வளவு ரசிச்சுப் பார்க்கப்படும். அதை தனிக் கட்டுரையாவே எழுதினாலோ வீடியோவாக வெளியிட்டாலோ இன்றைக்கும் பல கோடி பார்வைகள அரை நாளுக்குள்ளேயே எட்டும். அதேபோல் ரோஹித் ஷர்மாவின் செய்தியாளர் சந்திப்பும் கூட பல சந்தர்ப்பங்களில் ருசிகரமானதாக இருக்கும்.
வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்புல, "நானும் கோலியும் பந்து வீசலாம்"னு கிண்டலாப் பேசியிருந்ததாரு, பேட்டிங் ஆர்டர மாத்துறதுன்னு ஓப்பனர எட்டாவது இடத்துல இறங்க வைக்க மாட்டோம்னும் கேலி பண்ணியிருந்தாரு.
நடந்து முடிந்த ஆஷஸில் கூட பேட் கம்மின்ஸ் - பென் ஸ்டோக்ஸ் இருவரோட பத்திரிகையாளர்கள் சந்திப்புமே அத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களத் தாங்கி இருந்துச்சு.
பேர்ஸ்டோ இரண்டாவது டெஸ்ட்ல அலெக்ஸ் கேரேயால் ரன் அவுட் ஆக்கப்பட்டதும் அதுல எழுந்த சர்ச்சைகள், குழப்பங்கள் எல்லாமே தெரிஞ்சதுதான். ஆஸ்திரேலிய வீரர்களை டார்கெட் பண்ணி உப்புக் காகித விவகாரத்தைலாம் வெளியே இழுத்து பல கணைகளும் அவங்க மேல பாஞ்சது. என்றைக்கோ செஞ்ச தவறெல்லாம் தோண்டி எடுத்து அவங்கள பலவீனமாக்க பல கூட்டு முயற்சிகள் அரங்கேறுச்சு. ஆனா அதைப் பத்தியெல்லாம் அவங்க கண்டுக்கவே இல்ல.
"அண்டர் ஆர்ம் பௌலிங் பண்ணுவீங்களா?"ன்ற நக்கலான கேள்வி கேட்கப்பட, அதுக்கு கம்மின்ஸ் "அது எந்தளவு ஃபீல்ட் ஃப்ளாட் ஆகப் போகுதுன்றதப் பொறுத்த விஷயம்"னு தக் லைஃபா பதில் சொன்னாரு. அந்த முழு தொகுப்புலயும் அவர் மேல கத்திவீச்சா தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சாமர்த்தியமாவும் பொடி வச்சும் பதலளிச்ச விதம் அவங்களோட செயல் சரின்றதுல அவங்களுக்கு எந்தளவு தெளிவு இருக்குன்றதோட பிரதிபலிப்பா இருந்துச்சு.
பென் ஸ்டோக்ஸ் பேட்டில நடந்த ஒரு விஷயமும் அவ்வளவு ரசனைக்குரியதாக இருந்தது. கோப்பை கைநழுவிடுச்சு. அதைக் கைப்பற்ற இங்கிலாந்து தவறிடுச்சு. வில்லனா உருவெடுத்த மழை எல்லாத்தையும் குலைச்சுப் போட்ருச்சு. பொதுவா இது ஒரு அணியை அதுவும் ஆஷஸ் போன்ற முக்கிய தொடர்ல உடைச்சுப் போடும், கவலை தோய்ந்த முகத்தோட சோக கீதம் இசைக்க வைக்கும். ஆனா இங்கிலாந்தோட ப்ரஸ் கான்ஃபரன்ஸ்ல நடந்ததே வேறு.
பென் ஸ்டோக்ஸ் பேட்டியத் தொடங்கப்போற சமயத்துல, "பார்பி கேர்ள்" இசை எங்கேயிருந்தோ கேட்க அவர் குழப்பத்தோட சுற்றியும் பார்க்க, செய்தியாளர்கள் உடனே இசை வந்த திசைல கைகாட்டுனாங்க. அங்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் தான் அந்த மியூசிக்கை ப்ளே பண்ணிட்டு இருந்தாரு. "Woodyyyy"னு ஸ்டோக்ஸ் சிரிக்க அவர் அங்க இருந்து சிரிச்சுட்டே நகர்ந்தாரு. Oppenheimer, Barbie இரண்டுல எது நல்லாருக்குன்னு இங்கிலாந்து டிரெஸ்ஸிங் ரூம்ல நடந்துட்டு இருந்த விவாதத்தோட நீட்சிதான் இது. கிரிக்கெட்டுக்கு வெளியேயும் அவங்களுக்கு வாழ்க்கை இருக்குன்றதையும் புரிய வச்சது.
இந்த நிகழ்வு மேலோட்டமா சிரிச்சு நகர்றதுக்கு மட்டுமில்ல. அவ்வளவு பெரிய சம்பவத்தால கூட அவங்க உடைஞ்சு போயிடல, அடுத்த கம்பேக் பத்தி யோசிக்கற அளவு தெளிவு அவங்கட்ட இருக்குன்றதைதான் உணர்த்துச்சு. இந்த மைண்ட் செட் இருந்தாலே லைஃப்ல எவ்வளவோ சாதிக்கலாம்ன்றதுதான் உண்மை.
சமயத்துல செய்தியாளர்கள் சந்திப்பு ஒரு அணியோட மனநிலையின் பிரதிபலிப்புன்றதுக்கு இதுவும் ஒரு சாட்சிதான்.