MS Dhoni
MS Dhoni MS Dhoni
Lifestyle

IPL : RCB க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ள MS Dhoni - இந்த சாதனை தெரியுமா? | CSK vs RCB

டைம்பாஸ் அட்மின்

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன. பெங்களூர் அணிக்கு எதிராக இதுவரை 31 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், சென்னை அணியின் கேப்டன் தோனி.

இதில் மொத்தமாக 838 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் RCB அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்துள்ள வீரர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார் தோனி.

இதுவரை நடைபெற்ற சென்னைக்கும் பெங்களூருவிற்கும் இடையேயான 30 போட்டிகளில், 19 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் தோனியின் சாதனை தொடருமா என்பதை பார்ப்போம்.