Dhoni timepass
Lifestyle

IPL 2023 : CSK Dhoni கிட்ட சேஸிங் கலையை கத்துக்கணும் - Kevin Pietersen

200 அதிகமான ரன்களை சேஸ் செய்யும்போது இன்னிங்ஸின் இறுதிவரை போட்டியை எடுத்து செல்ல வேண்டும் என ‘சேஸிங் மன்னன்’ தோனி பலமுறை கூறியுள்ளார்.

டைம்பாஸ் அட்மின்

இருவது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இலக்கை எட்ட முடியாமல், பெரிய அணிகளே திணறிவருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கெவின் பீட்டர்சன், “200+ ரன்களை விரட்டும் போது இன்னிங்ஸின் இறுதிவரை போட்டியை எடுத்து செல்ல வேண்டும். 18, 19 மற்றும் 20-வது ஓவர் வரை எடுத்துச் செல்ல வேண்டும். இதை ‘சேஸிங் மன்னன்’ என அறியப்படும் தோனி பலமுறை சொல்லியுள்ளார். அவரிடமிருந்து பேட்ஸ்மேன்கள் அந்த கலையை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் இந்த 200+ ரன்களை 12 அல்லது 13-வது ஓவரில் விரட்டி முடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.