ஒரே பெயர்களக் கொண்டவங்கள வச்சு நடக்குற குழப்பம் கலந்த சுவாரஸ்யங்களும், அதனால் ஏற்படற குளறுபடிகளும் நிஜ வாழ்க்கைக்கு மட்டும் அல்ல ஐபிஎல்லுக்கும் புதுசு இல்ல.
ஏல மேடைல நேருக்கு நேரான ஒன் டு ஒன் மோதலும், பல முனைத் தாக்குதல்களும் மட்டும் இல்ல, பல ஓரங்க நாடகங்களும் நடக்கும். ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களும் அரங்கேறும். இந்த ஏலத்துல அப்படியொரு விஷயத்த பஞ்சாப் பண்ணி இருந்தது. பொதுவாகவே ஐபிஎல்ல The Best Entertainer-க்கான ஆல் டைம் அவார்ட பஞ்சாப்போட ஓனர் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தான் கொடுக்கணும்.
பொழுதுபோக்குக்காக பிராண்டெட் வீரர்கள அதிக விலை கொடுத்து வாங்கிக் குவிப்பார். அடுத்த சீசன்லயே அவங்கள தூக்கிக் கடாசுவும் செய்வார். வீரர்களை மட்டும் இல்ல கேப்டன்களையும் பந்தாடுவார். இந்த தடவ அவர் பண்ணது தான் உச்சக்கட்ட காமெடி. ஷசாங்க் சிங் அப்படின்ற வீரர் பெயரை ஆக்ஷன் விட்ட மல்லிகா ஷாகர் அறிவிக்க, அவசர அவசரமாக அவரை ஏலத்தில் கேட்டது பஞ்சாப் தரப்பு. கேட்ட பிறகு தான் தாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்புனது இந்த 32 வயது ஷசாங்க் சிங் இல்ல அது 19 வயது ஷசாங்க் சிங்னு அவங்களுக்குப் புரிய வந்தது.
பெயர் குழப்பம்னு கேட்ட ஏலத்தை அவங்க வாபஸ் வாங்க முயற்சிக்க "அதுலாம் முடியாது. கேட்டது கேட்டது தான்"னு மல்லிகா ஷாகர் சுத்தியலை வச்சு அவங்களுக்கு நெத்தியடி கொடுத்துட்டாங்க. வேற வழியில்லாம அவரை பஞ்சாப் வாங்க வேண்டியதாகிடுச்சு. ஏலத்திற்குப் பிறகு இவரைத்தான் வாங்க விரும்புனோம்னு அவங்க சமாளிச்சாலும் லைவ்ல வந்த காட்சிகள் அவங்களோட தப்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துடுச்சு.
ப்ரீத்தி ஜிந்தா இதுக்கு முன்னாடி ஒரே பெயர் கொண்ட இருவரை வைத்து ஒருமுறை வார்த்தை விளையாட்டு விளையாடி இருந்தாங்க. 2021 ஐபிஎல் ஆக்ஷன் அது. 20 லட்சம் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த ஷாருக்கானை பஞ்சாப் 5.25 கோடிக்கு வாங்குச்சு. வாங்கிய பிறகு ப்ரீத்தி, "நாங்க ஷாருக்கானை வாங்கிட்டோம்"னு நடிகர் ஷாருக்கானை வச்சு வம்பிழுத்து சிரிச்சுக்கிட்டே பேட்டி கொடுத்தாங்க. ரசிகர்களும் வீர்-ஜாரா ஒரே அணில இருக்கப் போறாங்கன்னு அப்போ கிண்டல் பண்ணியிருந்தாங்க. இந்த முறை அதே ஷாருக்கானைத் தான் குஜராத் அணி 7.4 கோடிக்கு வாங்கியிருக்கு.
ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வந்தது போன்ற ஒரு குழப்பம் ரசிகர்களுக்கும் ஒரு தடவை வந்தது. கேரளாவைச் சேர்ந்த சச்சின் பேபி ராஜஸ்தானால செலக்ட் பண்ணப்பட்டு, அங்கிருந்து ஆர்சிபிக்குப் போய், சன்ரைசர்ஸுக்கு வந்து, 2021-ல ஆர்சிபிக்குள்ள மறுபடி நுழைஞ்சாரு. இந்த சச்சின் பேபி முதல் முறை ஆக்ஷனுக்கு வந்த போது அவரை ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரோட பையன்னு தப்பா நினைச்சுக் குழப்பிக்கிட்டாங்க.
அதன் பின்னர் அவர் சச்சினோட மகன் இல்ல, அர்ஜுன் டெண்டுல்கர் தான் சச்சினோட மகன்றது புரிஞ்சதும் இதுவே காலத்துக்கும் பேசப்படற நகைச்சுவையான சம்பவமாக மாறிடுச்சு.
இந்த சம்பவங்கள் அத்தனையுமே மீம் கிரியேட்டர்களுக்கு காலத்துக்குமான கண்டெண்டைக் கொடுத்துருக்கு....