Kane Williamson
Kane Williamson Kane Williamson
Lifestyle

IPL : Gujarat Titans Kane Williamson க்கு பதிலாக களமிறங்க உள்ள இலங்கை அணி வீரர் யார்?

டைம்பாஸ் அட்மின்

16ஆவது ஐபிஎஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியின்போது, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்திற்காக பெயர் பெற்ற கேன் வில்லியம்சனின் விலகல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை வழங்கியது. ஊன்றுகோல்கள் உதவியுடன் கேன் வில்லியம்சன் நடந்து வரும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இவருக்கு பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி, 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆல்-ரவுண்டரான தசுன் ஷனகா, தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.