Mexico Mexico
Lifestyle

Mexico : IQ Test இல் Einstein, Stephen Hawking -ஐ மிஞ்சிய 11 வயது சிறுமி!

தன்னுடைய 3-ஆவது வயதில் ஆட்டிசம் கண்டறியப்பட பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார் அதரா. ஆனால் 'என்னையா கேலி கிண்டல் பண்றீங்க' என்பது போல தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெபிஷா ஜெ ஷோ

இயற்பியல் ஜாம்பவான்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கையே ஐ க்யூ டெஸ்டில் மிஞ்சியிருக்கிறார் மெக்சிக்கோ நகரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி அதரா பெரெஸ் சான்ஜெஸ் (Adhara Pérez Sánchez). இவரது ஐ க்யூ 162 ஆம். 

தன்னுடைய 3-ஆவது வயதில் ஆட்டிசம் கண்டறியப்பட பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார் அதரா. ஆனால் 'என்னையா கேலி கிண்டல் பண்றீங்க' என்பது போல தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அதரா. தனது ஐந்து வயதிலயே தொடக்க கல்வியை முடித்த இவர், அடுத்த ஒரு ஆண்டில் உயர்நிலைப் பள்ளி படிப்பையும் முடித்துள்ளார். 

அதோடு நின்றுவிடாத அதரா, தன்னை கேலி செய்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயரத்தை தொட்டுள்ளார். மெக்சிக்கோவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணிதத்தை முதன்மையாக கொண்டு இன்டஸ்ரியல் என்ஜினியரிங் மற்றும் சிஎன்சிஐ பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் என்ஜினியரிங் முடித்துள்ளார். 

'என்னை அடிக்க அடிக்க இன்னும் வலுவானவளாக திரும்பி வருவேன்' என்பதற்கு ஏற்ப பல கேலிகளை மிதித்து தன்னுடைய 11-ஆவது வயதில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். அதோடு, 'விண்வெளி வீராங்கனை' ஆக வேண்டும் என்ற பெருங்கனவையும் சுமந்து வருகிறார் அதரா. அவருடைய இந்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர் அவரது தாயாராம். 

தற்போது இளம் மாணவர்களுக்கு ஸ்பேஸ் மற்றும் கணிதத்துறை சார்ந்து மெக்சிக்கோவின் ஸ்பேஸ் மையத்துடன் இணைந்து பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார். 

நாசாவுடன் இணைந்து விண்ணை தொடும் புது கனவுக்காக அதரா பெரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.  இதை அடுத்து, அரிசோனா பல்கலைக்கழகம் அவருக்கு 'அஸ்ட்ரோபிசிக்ஸ்' படிப்பைத் தொடர உதவித்தொகை அளித்துள்ளது. ஆனால் விசா கிடைப்பதில்  தாமதம் ஏற்பட்டுள்ளதாம். எனினும் அதரா இந்த உலகத்தின் பல கோடி மாணவர்களுக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷன்! 

- ஜெபிஷா ஜெ ஷோ.