விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சிட்டு இருக்காங்க. அந்த வகையில ரீசன்டா பூமி கிட்ட இருந்து நிலா கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்கிறத கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.
"சுத்தி சுத்தி வந்தீக" அப்படின்னு பூமியை சுத்திட்டு வந்த ஒரே கோல் நிலா மட்டும் தான். ஈர்ப்பு விசை அப்படின்ற ஒரு வைப்ரேஷன் மூலமாகதான் நிலா பூமி கிட்ட இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் பயணம் செஞ்சு பூமியை சுத்திட்டு வருது. ஆனால், விஞ்ஞானிகள் பண்ற கண்டுபிடிப்புகள்ல நிலாவ பத்தி எக்கச்சக்கமான கேள்விகள் தான் உருவாகிட்டு இருக்கு.. சந்திரன் பூமியிலிருந்து மெதுவா வருஷத்திற்கு 3.8 செமீ தூரத்துல நகருது அப்டின்னு இங்கிலாந்தை தளமா கொண்ட இணையதளம் சொல்லியிருக்கு..
ரொம்ப காலத்துக்கு முன்னாடி நேரத்தையும் காலத்தையும் கணக்கிடறதுக்காக சந்திரனை ஒரு காலண்டரா பயன்படுத்திட்டு இருந்தோம். நேரத்த கணக்கிடறதுக்கு சந்திரன் முக்கியமான விஷயமாக இருந்துச்சி. ஆனா இப்ப கண்டுபிடிச்சிருக்க கண்டுபிடிப்புகள்ல நிலாவ பத்தி ஏராளமான கேள்விகள் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கு.. நிலாவ பத்தின கடந்த கால கண்டுபிடிப்புகள் மேலயும் நிறைய கேள்விகளை முன் வெச்சிருக்கு இப்போதய கண்டுபிடிப்பு.
ஒரு ஷாக்கான விஷயம் என்னன்னா இப்போ நிலா எந்த விகிதத்தில் நகர்ந்துட்டு இருக்கோ அதே விகிதத்துல முன்னாடிலிருந்தே நகர்ந்துட்டு இருந்திச்சின்னா கிட்டத்தட்ட 1.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னாடியே நிலாவும் பூமியும் மோதிக்கிட்டு இருக்கும். ஆனா இப்படி ஒரு சம்பவம் முன்னாடி நடக்கல, ஏன்னா இப்ப தான் நிலா வேகம் எடுக்க ஆரம்பிச்சிருக்கு..
"மிலன்கோவிச் சுழற்சிகள்" காரணமா தான் நிலா பூமி கிட்ட இருந்து விலகி போகுது அப்படின்னா நிபுணர்கள் நம்புறாங்க. இந்த சுழற்சி ஏற்பட்றதுனால பூமிக்கு எந்த அளவுக்கு சூரிய ஒளி வரணும் அப்படிங்குறது வேறுபடும் .. அதேமாதிரி சூரிய ஒளி அளவு வேறுபடுவதால அங்க இருக்கக்கூடிய (கிளைமேட்) காலநிலை மாறும் அப்படின்னு சொல்றாங்க. அப்போதைக்கு இருக்கக்கூடிய காலநிலை முழுசா ரிவர்ஸ்ல மாறுவதற்கும் இந்த மிலன்கோவிச் சுழற்சி வழிவகுக்கும்.
இந்த சுழற்சி, அதனுடைய அளவ பொறுத்துதான் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் நிர்ணயிக்கப்படுது. சுமார் 2.6 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி நிலாவும் பூமியும் இப்போ இருக்குறதவிட 60,000 கிமீ நெருக்கமா இருந்ததா விஞ்ஞானிகள் சொல்றாங்க.
"என்ன விட்டு நீ போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன்" அப்படின்னு நிலா என்ன தான் பூமியை விட்டு விலகிப் போனாலும் பூமி நிலாவுக்காக காத்திட்டு தான் இருக்கு. இந்த மிலன்கோவிச் சுழற்சிகள் என்கிற மாமா குட்டி பண்ற சதியினால எவர்லாஸ்டிங் லவ் விலகிட்டு இருக்குனு நினைக்கும்போது கஷ்டமாதான் இருக்கு !!!
- நெ.ராதிகா