ஜாவேத் மியான்தத் டைம்பாஸ்
Lifestyle

கலாய் கிரிக்கெட்டர்கள்: 'ஜாவேத் மியான்தத்தின் சேட்டைகள்' | Epi 2

Ayyappan

'Stealing the Show'னு ஒரு கேட்டகிரில ஆஸ்கார் விருது வழங்குனா, அதுல ஹீரோக்கள், வில்லன்களவிட ஜனரஞ்சகமான கேரக்டர்கள்தான் அதிகமா இடம்பிடிப்பாங்க. கிரிக்கெட்லயும் எண்ட்லஸ் எண்டர்டெய்ன்மெண்ட்க்கு கேரண்டி தர்ற அப்படிப்பட்ட ஆட்கள நோக்கிதான் காமராவோட கண்கள்கூட அடிக்கடி‌ திரும்பும்.

அந்தமாதிரியான ஒரு கிரிக்கெட்டர்தான் பாகிஸ்தானோட ஜாவேத் மியான்தத். நான்கு ரன்கள் தேவைப்பட்ட இடத்துல சிக்ஸருக்கு பந்தத் தூக்கி, இந்தியாவோட Austral - Asia கப் கனவக் கலச்சுப் போட்ட, 1981-ல டென்னிஸ் லில்லிகூட நெருப்புக் கோழியா ஊடுகட்டி சண்டைக்குப் போன மியான்தத் பத்தி நமக்குத் தெரியும். ஆனா, அடாவடிக்கும் நான்தான், அன்லிமிடெட் ஃபன்னுக்கும் நான்தான்னு அவரு நிருபிச்ச சந்தர்ப்பங்கள் பல. ஒரு முழநீளத் திரைப்படக் காட்சியையும் அவரு ஃபீல்டுல இருக்கப்போ பார்க்கலாம்.

அவரோட பலம், ஆஃப் சைடு. இதனால ப்ளான் பண்ணி இந்தியா அவரு அந்த ஏரியால அடிக்கவிடாத மாதிரி பால் போட்டாங்க. தன்னோட கடுப்ப வெளிப்படுத்துற விதமா, பால் போட்டுட்டு இருந்த திலீப் தோஸிகிட்ட, "உன்னோட ரூம் நம்பர் சொல்லு, பாலை அங்க அடிக்கறேன்னு சொல்லிட்டு, ஒரு ஃபீல்டர ரூமுக்குள்ளயும் நிக்க வை"னு நக்கலடிச்சுருப்பாரு.

இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில, விக்கெட் கீப்பர் கிரண் மோர், இவருக்கெதிரா மறுபடி மறுபடி அப்பீல் பண்ணிட்டே இருப்பாரு. அதுக்கு, அவர இமிடேட் பண்ற மாதிரி, தவளை மாதிரி ஜம்ப் பண்ணி கிண்டலடிச்சத இப்போ பார்த்தாலும் நம்மள அறியாம சிரிக்கத்தான் தோணும். இது களத்துல நடக்குமே தவிர அதுக்கப்புறம் தொடராது, அந்த இடத்துலதான் அவரு ஸ்பெஷல். அந்தப் போட்டிக்கப்புறம், கிரண் மோரை தன்னோட வீட்டுக்கே கூப்பிட்டுப் போய் விருந்தே வச்சாரு.

கவாஸ்கரையும் ஓவரா வம்பிழுப்பாரு. பால் ஹேண்ட்லிங் ரூல்படி அவர அவுட்ஆக்க, "Take the ball old man"னு அவர பலதடவ வம்பிழுத்துருக்காரு. கவாஸ்கரும் பதிலுக்கு, பந்த எடுக்கப்போறது மாதிரி ஆக்ட் பண்ணி, புற்கள அவருமேல பிடுங்கி வீசுவாரு.

இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒருதடவ இயான் செப்பலைக் கலாய்ச்சாங்க. டாஸுக்காக அவரு வரணும்னு ரெண்டுபேரும் வெய்ட் பண்ண, செப்பல் லேட்டா வந்தாரு. அதுக்கு பேசி வச்சுட்டு, டாஸ் போட்டு முடிச்ச மாதிரி இவங்க கிளம்ப, அவரு உண்மைனு நினைச்சு பதற, ரெண்டு பேரும் அவரக் கிண்டல் பண்ணி சிரிச்சாங்க.

வாசிம் ஜாஃபர் சமீபத்தில பகிர்ந்த மியான்தத்தோட இன்னொரு டாஸ் இன்சிடென்டும் சிரிப்பை வரவழைச்சது.

டாஸ அவரு ஜெயிச்சதும் என்ன பண்ணப் போறார்னு கேட்டதுக்கு, "எனக்குத் தெரியல, உள்ள போய் யோசிச்சுட்டு அப்புறமா சொல்றேன்'னு சிரிக்காமலே கலாய்ச்சிருப்பாரு.

பந்துபோட வந்த மெர்வ் ஹ்யூக்ஸை ஒருதடவ, "கிரிக்கெட்டர் மாதிரியே இல்லையே உன்னைப் பார்த்தா, ரொம்ப குண்டாயிருக்க, பஸ் கண்டக்டரா நீ"னு நையாண்டி பண்ண, அவரு இவரோட விக்கெட்ட எடுத்துட்டு வந்து, "டிக்கெட் ப்ளீஸ்"னு பதிலடி கொடுத்துருப்பாரு.

எல்லாத்துக்கும் உச்சமா, ஒரு ஓவர்ல, பாப் வில்லிஸ், டென்னிஸ் லில்லி, ராட்னி ஹாக் மூணு பேரோட பௌலிங் ஆக்ஷன்லயும் பௌலிங் போட்டு ஒட்டுமொத்தமா எல்லாரையும் சிரிக்க வச்சுருப்பாரு. யூ ட்யூப்ல இப்பவும் அது கிளாசிக்கல் கோல்டா சுத்துது.

டி20 மட்டும்தான் பந்துக்குப் பந்து ரசிக்க வைக்கும்னு நினைச்சீங்கன்னா, மியான்தத்தோட பழைய வீடியோக்களுக்கு விசிட் அடிங்க.....