மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் முதியவருக்கு சொந்தமாக ஒரு நிலம் இருந்தது. அந்த நிலத்தை தனது மகன்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்தார்.
ஆனால், வரப்பில் இருந்த பனை மரம் யாருக்கு சொந்தம் என்பதில் அண்ணன் தம்பிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த பிரச்சினை கீழ்கோர்ட், மாவட்ட நீதிமன்றம் என்று சுற்றி கடைசியில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.
இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. இருந்தாலும் வழக்கு இழுத்துக்கொண்டே போனது. ஒருநாள் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய, அப்போது விழுந்த இடியில் பனைமரம் முற்றிலுமாக கருகிப் போய் விட்டது.
இதை எடுத்து அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுக்கு பேர்தான் இயற்கையோ?