Guinness Record
Guinness Record Guinness Record
Lifestyle

Longest Fingernails : கின்னஸ் சாதனை படைத்த மகாராஷ்ட்ரா முதியவர் ! | Guinness Record

டைம்பாஸ் அட்மின்

உலகில் வித்தியாச வித்தியாசமாக பல்வேறு சாதனைகள் மூலம் கின்னஸ் புத்தகத்தில் பலர் இடம் பெற்று வருகின்றனர். அதுபோல் மிக நீளமான நகங்களை வளர்த்து உலக சாதனைப் படைத்துள்ளார் இந்தியாவைச் சார்ந்த ஸ்ரீதர் சில்லால்.

86 வயதான ஸ்ரீதர் சில்லால் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தைச் சார்ந்தவர். இவர் இடது கை விரல்களில் 909.6 செமீ அதாவது 29 அடியில் நீளத்திற்கு நகங்களை வளர்த்து உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இவரின் கட்டை விரல் நகம் மட்டும் 197.8 செமீ அதாவது 6.5 அடி நீளத்திற்கு உள்ளது. இதனை உலக சாதனையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்தது.

இவர் 66 ஆண்டுகளாக இடது கை விரல்களில் நகங்களை பாதுகாப்புடன் வளர்த்த காரணத்தினால், இடது கை செயல் இழக்கும் நிலைக்கு ஆளானதோடு இடது காது செவித்திறன் குறைபாடும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 11 ஜூலை 2018 அன்று இவரது நீண்ட நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இதேப்போல் லீ ரெட்மாண்ட் என்ற அமெரிக்காவை சார்ந்த பெண்மணி இரண்டு கைகளிலும் நீளமான நகம் வளர்த்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- சா.முஹம்மது முஸம்மில்.