Musheer Khan
Musheer Khan timepass
Lifestyle

Musheer Khan: Sachin சாதனையை முறியடித்த முஷீர் கான் - சதங்களால் மிரட்டும் 19 வயது இளைஞரின் கதை!

டைம்பாஸ் அட்மின்

சச்சின் டெண்டுல்கரின் 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.

சச்சின் டெண்டுல்கரின் 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த இளைஞர் தான் முசீர் கான். அவரது முழு பெயர் முசீர் நவ்ஷத் கான். இவர் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அசாம் காரில் பிறந்தார். 2022-23 ரஞ்சி டிராபியில் மும்பைக்காக 27 டிசம்பர் 2022 அன்று முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆல்ரவுண்டராக ஆடும் திறன் கொண்ட இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் ஆவார்.

1994 - 95ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் தனது 21 வயதில் சதம் அடித்ததே தற்போது வரை யாரும் தகர்க்க முடியாத சாதனையாக (குறைந்த வயதில் ரஞ்சி இறுதிப் போட்டிகளில் சதம்) இருந்தது. அந்த இறுதிப் போட்டியில் சச்சின் 140, 139 என இரு சதங்களை விளாசியிருந்தார். இந்நிலையில் 19 வயதாகும் இளம் வீரரான முஷீர் கான், ரஞ்சி இறுதிப் போட்டியில் சதம் அடித்து சச்சினின் 29 ஆண்டுக்கால சாதனையை முறியடித்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் முஷீர் கான் 131 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 300 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை முஷீர் படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான முஷீரின் இரண்டாவது சதம் இதுவாகும். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஒரு சதத்திற்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் முஷீர் கான் என்ற சாதனையை படைத்தார். முஷீருக்கு முன் ஷிகர் தவான் இந்த சாதனையை செய்திருந்தார். 2004ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஷிகர் தவான் மூன்று சதங்கள் அடித்திருந்தார். 2024 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் முஷீர் கான், நான்கு இன்னிங்ஸ்களில் 81.25 சராசரியுடன் 325 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் முஷீர் கான் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். முன்னதாக, ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 202இல், பாகிஸ்தானின் ஷாஜாய்ப் கான் மூன்று இன்னிங்ஸ்களில் 223 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வலது கை பேட்ஸ்மேன் ஆல்-ரவுண்டராக, முஷீர் கான் இந்திய U-19 கிரிக்கெட் அணியின் வீரராக 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

- ல. அஜீத்குமார்.