ஃபாஸ்ட் புட் ஃபாஸ்ட் புட்
Lifestyle

'ஃபாஸ்ட் புட்ல உட்கார்ந்துகிட்டு பழைய சோறு கேட்கலாமா?' - புதுமொழிகள் சில

"நேற்று ஏரியா இருந்தது... இன்னைக்கு ஏரியாவா மாறிடுச்சு!"

பாதுஷா

மொழிகளையே இன்னும் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருந்தால் எப்படி?

சில பழமொழிகளை இந்தக் காலத்து மாற்றங்களுக்கேற்ப டிங்கரிங் பார்த்திருக்கோம் பாஸ். இதையெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுத வேண்டியது மட்டும்தான் பாக்கி!

  • வேலையில்லாத மாமியார் ஃபேஸ்புக்ல ப்ரொஃபைல் போட்டோவை மாத்திக்கிட்டே இருந்தாளாம்!

  • ஆயிரம் லைக்கு வாங்கினவன் அரைப் பிரபலம்!

  • வாட்ஸ் அப்ல ஃபார்வர்ட் மெஸேஜ் அனுப்பினவனும் ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் மெஸேஜ் அனுப்பினவனும் உருப்பட்டதா சரித்திரமேயில்ல!

  • பால் விலையேறுனதுக்கும் பான்பராக் விலையேறுனதுக்கும் என்ன தொடர்பு?

ஏடிஎம்மே ஏடிஎம்மேன்னா பணம் தராது! பட்டனை அமுக்குனாதான் பணம் தரும்!
  • சினிமா டிக்கெட் விலை கால்காசு! பாப்கார்ன் விலை முக்கா காசு!

  • ஃபாஸ்ட் புட்ல உட்கார்ந்துகிட்டு பழைய சோறு கேட்கலாமா?

  • ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றவன் கூட்டம், கும்பல் பத்தி கவலைப்படலாமா?

  • நேற்று ஏரியா இருந்தது... இன்னைக்கு ஏரியாவா மாறிடுச்சு!

  • ஆத்துல மணல் அள்ளினாலும் அளவோட அள்ளு!

  • சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆனால், அர்த்த ராத்திரியிலும் ஷோ போடுவாய்ங்க!

  • ஸ்பீடு உள்ளபோதே ஐஆர்சிடிசி-ல புக் பண்ணிக்கோ!

  • கஸ்டமர் கேருக்கு போன் பண்ணிட்டு கடலை போடாதே!