ராக்கிக்கான QR குறியீடு மெஹந்தி வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பிக்கொண்டு வைரலாகி வருகிறது.
ரக்ஷாபந்தன் பண்டிகைக்காக மெஹந்தி கலைஞன் ஒரு பெண்ணின் கையில் செயல்படாத QR குறியீட்டை நுட்பமாக வரைந்துள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது.
பாரம்பரியமாக, ராக்கி பண்டிகையின் போது சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு 'சாகன்' (பரிசு) பணத்தை வழங்குகிறார்கள்.
திறமையான மெஹந்தி கலைஞரான யாஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து யாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , "எனது மெஹந்தி வீடியோவுடன் கூடிய இது நவீன பணம் பரிமாற்றத்தை குறிக்கிறது .அந்த மெஹந்தி QR குறியீட்டை பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்த முடியாது"
- அ. சரண்.