Worldcup timepass
Lifestyle

U19 Worldcup : Rashid khan மருமகன், Sarfaraz Khan சகோதரர் - களத்தில் இறங்கும் கிரிக்கெட் சொந்தங்கள்!

டைம்பாஸ் அட்மின்

ஐசிசி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அண்டர் -19 கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.   

இருப்பினும் அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பையை பொறுத்தவரை தொடரில் விளையாடும் வீரர்களைக் குறித்து பெரும்பாலான தகவல்கள் வெளியாகாது. ஆனால் இந்த உலக கோப்பையில் வீரர்களை பற்றிய நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ரத்த சொந்தங்களும் இந்த தொடரில் விளையாடுவது தெரியவந்துள்ளது. சுவாரஸ்யமான அப்பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா:- முஷீர் கான் சர்ஃபராஸ் கானின் சகோதரர். இவர் இந்த ஆண்டு U-19 உலகக் கோப்பையில் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவர். பலர் அவரது சகோதர் சர்ஃபராஸ் கானை விட சிறந்த பவர் ஹிட்டராக வருவார் என்று கணித்துள்ளனர்.

ஆப்காஸ்தான்:- ஹசன் ஈசகில் - முஹம்மது நபியின் மகன். உஸ்மான் கான் ஷின்வாரி - ரஷித் கானின் மருமகன். ஜம்ஷித் சத்ரன் - இப்ராஹிம் சத்ரானின் உறவினர்.

வங்காளதேசம்:- ஜிஷான் ஆலம் - ஜஹாங்கீர் ஆலத்தின் மகன்.

இங்கிலாந்து:- லக் பென்கென்ஸ்டீன் - டேல் பென்கன்ஸ்டைனின் மகன். ஹைடன் மஸ்டார்ட் - பில் மஸ்டார்டின் மகன். ஜெய்டன் டென்லி - ஜோ டென்லி இவருடைய மாமா. ஃபர்ஹான் அகமது - ரெஹான் அகமதுவின் சகோதரர்.

நியூசிலாந்து:-    டாம் ஜோன்ஸ் - ஜெர்மி கோனியின் பேரன். மேலும் டாம் ஜோன்ஸ் நியூசிலாந்தின் துணைக் கேப்டன் மற்றும் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாட உள்ளார். மாட் ரோ - ஹன்னா ரோவின் உறவினர். மாட் ரோ வேகப்பந்து வீச்சாளர்.

பாகிஸ்தான்:-   உபைத் ஷா - நசீம் ஷாவின் சகோதரர்.

மேற்கிந்திய தீவுகள்:-   டெவோனி ஜோசப் - டெவோன் ஸ்மித்தின் மருமகன். டெவோனி ஜோசப், மேற்கிந்திய தீவுகள் U-19 விக்கெட் கீப்பர்.

- மு.குபேரன்.