Sanchar Saathi
Sanchar Saathi Sanchar Saathi
Lifestyle

AI - Sanchar Saathi : இனி திருடு போன மொபைலை எளிதில் கண்டுபிடிக்கலாம் !

சு.கலையரசி

இனி மொபைல் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ எளிதாகக் கண்டுபிடிக்கவும் அதன் செயல்பாட்டை முடக்கவும் 'சஞ்சார் சாத்தி' என்ற புதிய இணையதள சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. மொபைலில் உள்ள “ஐஎம்இஐ” எண்ணைக் கொண்டு அவற்றின் இருப்பிடத்தை எளிதாகக் கண்டறிய முடியும். 

தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களால் அதிகாரப்பூர்வமாக மே 17 அன்று வெளியிடப்பட்ட இந்த சஞ்சார் சாத்தி போர்டல் நாடு முழுவதும் செயல்படும்.

தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்காணிக்க அரசாங்கம் www.sancharsaathi.gov.in என்ற புதிய போர்டலை வெளியிட்டுள்ளது.

இந்த போர்டல் தற்போது டெல்லி மற்றும் மும்பையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலின் உதவியுடன் இதுவரை 4,70,000 தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த போர்ட்டல் உதவியுடன், பயனர்கள் சிம்கார்டு எண்ணைப் பதிவுசெய்து, உரிமையாளரின் ஐடியை வைத்து வேறு யாராவது சிம்மை பயன்படுத்துவதையும் கண்டறியலாம் .

தொலைத்தொடர்பு மோசடிகளை கண்டறிய சஞ்சார் சாதி என்ற AI- அடிப்படையிலான இந்த போர்ட்டலை பயன்படுத்தி மொபைலில் புதிய சிம் செருகப்பட்டாலும், தொலைத்தொடர்பு பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட போன்களையும் கண்டறியலாம். ஃபோன்களில் உள்ள தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாக்க உதவுகிறது.