கொசுவிரட்டி டைம்பாஸ்
Satire

'கொசுவை விரட்டணுமா? நாய் வளர்க்கணுமா?' - அதுக்கும் இருக்கு APPகள்

‘கொசுவிரட்டி' அப்ளிகேஷனை ஆன் செய்துவிட்டால், அதிலிருந்து வெளிவரும் ஒருவித ஒலியால் கொசுக்கள் உங்கள் அருகிலேயே நெருங்காதாம்.

கம்மாய் திமிங்கலம்

‘இதுக்கெல்லாமாடா அப்ளிகேஷன்ஸ் கொடுப்பீங்க’னு ஒய் திஸ் கொலவெறி ரியாக்‌ஷன்ஸ் காட்டவைக்கும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் இவை.

ஆன்ட்டி மஸ்கிட்ட்டோ:

சுருக்கமா ‘கொசுவிரட்டி’னு சொல்லலாம். அப்ளிகேஷனை ஆன் செய்துவிட்டால், அதிலிருந்து வெளிவரும் ஒருவித ஒலியால் கொசுக்கள் உங்கள் அருகிலேயே நெருங்காதாம்.

தவிர, இந்த ஒலி கொசுக்களுக்குதான் கேட்குமே தவிர, உங்கள் காதுகளைத் துளைத்து தொந்தரவு செய்யாது என்பதால், நோ பிராப்ளமாம்.

‘அடடே அற்புதம்யா’ என்கிறீர்களா? இப்படிப்பட்ட அப்ளிகேஷன்களை டவுன்லோடு பண்ணினா, உங்க மொபைல் பேட்டரி ‘பிளிங் பிளிங்’ என இழுத்துக் கிட்டுக் கிடக்குமே தவிர, பைசா பிரயோஜனம் கிடையாது என்பதுதான் அனுபவஸ்தர்கள் கண்டறிந்த உண்மை!

டாக் பிரீட்ஸ் :

நாயே... உன்னையெல்லாம் வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்?’ என எத்தனையோ தந்தைகள் மகனிடம் பேசிய பன்ச் டயலாக்தான் இந்த அப்ளிகேஷன் உருவாக அடித்தளமாக இருந்திருக்கும்.

ஏன்னா, நாயை எப்படி வளர்ப்பது எனச் சொல்லிக்கொடுக்கிறது இந்த அப்ளிகேஷன்.

நாய் இருக்கும்போது, இந்த பூனை, முயல் எல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு? அதையும் இப்படித்தான் வளர்க்கணும்னு சொல்லிக்கொடுக்கவும் அப்ளிகேஷன்கள் வரிசை கட்டுகிறது. என்ன பாஸ்... கல்லைத் தேடுறீங்களா?