லவ் ஃபெயிலியர் டைம்பாஸ்
Satire

லவ் ஃபெயிலியரால் ஏற்படும் நன்மைகள் பத்து!

லவ்வருக்காக பஸ் ஸ்டாப்ல கால் கடுக்க வெயிட் பண்ற நேரத்தில், அரியர் எக்ஸாமுக்குப் படிக்கலாம். படிக்கிற அளவு வசதி இல்லைனா பிட்டாவது எழுதலாம்.

பாதுஷா

லவ் ஃபெயிலியர் ஆகிடுச்சுனு மூஞ்சியை மூஞ்சுரு குமாரு மாதிரி வெச்சிக்கிட்டு அலையாதீங்க. லவ் ஃபெயிலியர்ல எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு தெரியுமா? இதோ...

நாட்டுல நல்லா மழை பெய்யும். ஆமாங்க, காதலியை வர்ணிச்சுக் கண்டதையும் எழுதி பேப்பரை வேஸ்ட் பண்ண மாட்டீங்க. பேப்பரெல்லாம் மிச்ச மானா, மரங்கள் அதிகமா வெட்ட மாட்டாங்க, மரம் இருந்தா... மழை பெய்யும்.

ஃபேஸ்புக்ல எந்தப் பொண்ணுடைய ஸ்டேட்டஸுக்கும் தைரியமா லைக் போடலாம். அவளுக்கு லைக் எனக்கு அன்லைக்கானு யாரும் கேட்க மாட்டாங்க.

‘ஃப்ரெண்டு வீட்ல இருக்கேன்’னு பையனும், ‘ஹே அப்பா இருக்கார். அப்புறமாப் பேசு’னு பொண்ணும் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

அதுவரைக்கும் பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லனாத் தெரிஞ்ச அவளுடைய அப்பாவும் அண்ணனும் அதுக்கப்பறமா தம்பி ராமையா மாதிரி குணச்சித்திர நடிகரா உங்க கண்ணுக்குத் தெரிவாங்க.

லவ்வருக்காக பஸ் ஸ்டாப்ல கால் கடுக்க வெயிட் பண்ற நேரத்தில், அரியர் எக்ஸாமுக்குப் படிக்கலாம். படிக்கிற அளவு வசதி இல்லைனா பிட்டாவது எழுதலாம்.

‘அவ தும்மும்போதுகூட அவ்வளவு அழகு’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் அள்ளலாம்.

‘தம்பி காதல்ங்கிறது...’ அப்பிடினு எல்லோருக்கும் அட்வைஸ் கொடுத்து ஒரு லவ் என்சைக்ளோபீடியாவா மாறலாம்.

லவ்வருடைய பிறந்தநாளுக்கு பார்த்திபனைவிட அதிகமா யோசிச்சு கிஃப்ட் வாங்க அவசியம் இருக்காது.

லவ்வரோட மொக்கை போடுற நேரத்தை டைம்பாஸ் வெப்சைட் படிக்கிறதுக்கு யூஸ் பண்ணலாம்.

எல்லாத்துக்கும் மேல அடுத்து லவ் பண்றதுக்கு யாரையாவது ட்ரை பண்ணலாம். அதனால் டோன்ட் வொர்ரி... டோன்ட் வொர்ரி... பீ ஹேப்பி!