Bts
Bts Timepassonline
Satire

10 Years of BTS: இனி இந்த K-POP Fans-அ கைலயே பிடிக்க முடியாது !

ராதிகா நெடுஞ்செழியன்

ஜூன் வந்தா BTSஅ சார்ந்த K-POP குழுவுக்கு வயசு பத்து.. இந்த பத்து வருஷத்த கொண்டாடுற விதமா BTS FESTA பத்தின அறிவிப்பு வந்திருக்கு..

தனது 10வது ஆண்டு விழால "டேக் டூ" ன்ற டிஜிட்டல் சிங்கிள் பாடல வெளியிட போவதா BTS குழு அறிவிச்சிருக்கு. இந்த பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்துல வெளியிடப் போற டேக் டூ டிஜிட்டல் சிங்கிள் பாடல K-POP குழுவுல இருக்க RM, Jin , Suga, J-Hope, Jimin, V, Jungkookனு ஏழு பேருமே வழக்கம்போல பாடி மாஸ் காட்ட போறாங்க... 

இந்த கொண்டாட்டத்த பத்தி BTS குழு "BTS மேல நீங்க காட்டி இருக்க அன்பு ரொம்ப பெருசு.. இந்த அன்பு தான் இந்த பத்து வருஷ பயணத்த சாத்தியமாக்கியிருக்கு.. ராணுவத்துக்கு எங்களோட நன்றிய தெரிவிக்கிற விதமாதான் இந்த டேக் டூ அமையும், அது மட்டும் இல்லாம இந்த "டேக் டூ" உங்க எல்லாருக்கும் BTS கொடுக்கிற விலைமதிப்பற்ற பரிசா மாறும்னு நம்புறோம். உங்களோட அன்பையும் ஆதரவையும் எப்பயும் போல எங்களுக்கு தாங்க"னு சொல்லியிருக்காங்க.

"டேக் டூ" ஈவன்ட் இந்த ஜூன்ல நடக்கப்போகுது‌. இந்த அறிவிப்பு வந்ததும் BTS ஆர்மிய கையிலயே பிடிக்க முடியல.. இந்த அறிவிப்பு வந்ததுமே ட்விட்டர்ல "TAKE TWO IS COMING, BTS IS COMING, BTS IS BACK, BTS NEW SONG IS COMING" அப்படி இப்படின்னு பட்டைய கிளப்பிட்டு இருக்காங்க BTS ஆர்மீஸ்..

BTS ஜூன் 14, ஜூன் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகள்ல நிகழ்ச்சிகள  திட்டமிட்டிருக்காங்க‌‌.. ஒவ்வொரு வருஷமும் BTS நடத்துற நிகழ்ச்சிகள்  ரசிகர்கள் மத்தியில ஆச்சரியத்த ஏற்படுத்தியிருக்கு‌‌.. அதே மாதிரி இந்த வருஷமும் BTS ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் இருக்கும்னு சொல்லலாம்..

BTS ஆர்மீஸ் ....  ஆரம்பிக்கலாமா ???