Kovai
Kovai Timepassonline
Lifestyle

Kovai : சித்தப்பா - அண்ணன் மகன்கள் பிரச்னையால் குறைந்த விலையில் விற்பனையா? - வைரல் போஸ்டர்!

டைம்பாஸ் அட்மின்

ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு மார்க்கட்டிங் ரொம்ப முக்கியம். சின்ன பல்பொடி முதல் பிராண்ட் கார்களின் விற்பனையை தீர்மானிக்கிறது அந்த கம்பனி செய்கிற மார்க்கட்டிங்தான். இந்த நிலையில் கோவை  ஆர் எஸ் புரம் பகுதியிலுள்ள ராஜஸ்தானி சங்கம் துணிக்கடை, தனது விற்பனையை அதிகரிக்க விதமாக  சித்தப்பா -அண்ணன் மகன் பிரச்னை காரணமாக கடைகளை முடிவதாகவும்.. அந்த பிரச்னைகளால் துணிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது என்று நகைச்சுவையான பாணியில்  விளம்பர போஸ்டர் ஒன்றை இன்று நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

இதே போல 2021ம் ஆண்டு கூட சென்னையில் விற்பனையை செய்தது. எல்லா ஊர்களும் நல்ல வரவேற்பு கிடைக்க சித்தப்பா -அண்ணன் மகன் கான்செப்டில் மீண்டும் விற்பனை வேட்டையில் இறங்கியுள்ளது ராஜஸ்தானி துணிக்கடைகள். அந்த போஸ்டரில் சித்தப்பா அண்ணன் மகனுக்கு ஏற்பட்ட  மனகசப்பு காரணமாக 7 விற்பனை ஷோ ரூம்கள் மற்றும் பெரிய நகரங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளதாம்.

இதனால் குடும்ப பிரச்னை காரணமாக துணிகளை குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளது ராஜஸ்தானி கடை. அதிக விலைக்கு விற்கபடுக்கிற ஜுன்ஸ் மற்றும் ஷிர்ட் வெறும் 250 ரூபாய்க்கு மட்டுமே. குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லோருக்குமான துணிகள் கம்மி விலையில இருக்குதாமாம்.

இந்த விற்பனை ஜூ லை 1 முதல் ஜூ லை 4 வரை நடக்கயிருக்கு  என்று போஸ்டரில் குறிப்பிட்டுயிருகிறது. தற்போது சமூக வலைதளங்களில்  இந்த விளம்பர போஸ்டர் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.