Instagram Instagram
Lifestyle

Instagram : Noodles உடன் கால் எலும்பை சேர்த்து சமைத்த Insta பிரபலம் !

"நான் என் கால் எலும்பை சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது என் ஒரு பகுதியாக இருந்ததால் அதை மீண்டும் என் உடலில் வைக்க வேண்டும்" என்று கோனு தன் ஆசையை கூறியிருக்கிறார்.

ஜெபிஷா ஜெ ஷோ

'இப்படி எல்லாமா ஆசைப்படுவாங்க' என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்புளுவன்சரான பவுலா கோனு எனும் இளம் பெண். 

30 வயதான இவருக்கு, இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவார்ஸ் இருக்கிறார்களாம். சமீபத்தில் கிளப் 113 போட்காஸ்ட்டில், தனக்காகவும் தன் பார்ட்னருக்காகவும் கோனு சமைத்த நூடில்சில் தன் முழுங்கால் குருத்தெலும்பையும் சேர்த்து சமைத்ததாக கூறியிருக்கிறார். 

'ஒரு  நிமிடம் இது எப்படி சாத்தியமாகும்' என்று யோசிப்பவர்களுக்கு அந்த விவகாரத்தின் பின்னணியையும் மொத்தமாக கூறியிருக்கிறார். சமீபத்தில் கோனுவின் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குருத்தெலும்பு அகற்றப்பட்டுள்ளது.

கோனு அந்த குருத்தெலும்பை பாதுகாக்க விரும்பியதால் அறுவை சிகிச்சை நிபுணரின் அறிவுறுத்தல் படி, ஆல்கஹாலில் பதப்படுத்தி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஒரு நாள் தன் பார்ட்னருடன் பேசி கொண்டிருக்கையில், "நான் என் குருத்தெலும்பை சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது என் ஒரு பகுதியாக இருந்ததால் அதை மீண்டும் என் உடலில் வைக்க வேண்டும்" என்று கோனு தன் ஆசையை கூறியிருக்கிறார். அதன்படி அவர் நூடில்சுடன் பதப்படுத்தப்பட்டு வந்த தன் முழுங்கால் குருத்தெலும்பையும் சேர்த்து சமைத்துள்ளார். 

இதை அடுத்து, அவர்மேல் நெட்டீசன்கள் பல விமர்சனங்களை தொடர்ந்ததை அடுத்து "மோசமான விலங்குகளின் எலும்புகள், குருத்தெலும்பு மற்றும் பிற பாகங்களை பலர் உட்கொள்கின்றனர். எனவே உங்கள் சொந்த உடலின் ஒரு பகுதியை சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படக்கூடாது" என்று பதில் கூறியிருக்கிறார். ' இதுவும் ஒரு வெரைட்டிதான்' என்பது போல தன் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் கோனு.