Lifestyle

தினம் ஒரு தினம் - தமிழ் மாதத்துல இன்னைக்கு என்ன தினம்?

தை 5 - 90ஸ் கிட்ஸுகளுக்கு பெண் பார்க்க போகும் தினம். ஆனி 20 - ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக 5214ஆவது தடவையாக அறிவிக்கும் தினம்.

Aravindraj R

தினம் ஒரு திருக்குறள், தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு தினம் இருந்தா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பாத்தோம். அதுல கெடச்ச முக்கியமான தினங்களோட லிஸ்ட்ட கீழப் பாப்போம்.

ஆவணி 2 - கறிக்கடையில் அரை கிலோ கறிக்கு கால் கிலோ ஈரல் ஓசிக் கேட்கும் தினம்.
மாசி 19 - ஜீன்ஸ் பேண்ட்டை ஆறு மாதத்திற்கு துவைக்காமல் வைத்து துவைக்கும் தினம்.

ஆடி 12 - தினமும் பக்கத்து சீட்காரரிடம் ஓசி ஹெட் போன் வாங்கும் தினம்.

தை 5 - 90ஸ் கிட்ஸுகளுக்கு பெண் பார்க்க போகும் தினம்.
ஆனி 20 - ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக 5214ஆவது தடவையாக அறிவிக்கும் தினம். மார்கழி 13 - வசந்த் அன்ட் கோ விளம்பரம் பார்க்கும் தினம்.

வைகாசி 8 - 253, 1001 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் தினம்.
கார்த்திகை 23 - 'மனைவி சொல்லே மந்திரம் -3'க்கு கதை யோசிக்கும் தினம்.
சித்திரை 4 - சிங்கில்தான் கெத்து என வாட்சப், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் தினம்.

ஐப்பசி 26 - தை முதல் மாதமா? இல்லை சித்திரை முதல் மாதமா என குழப்பத்தில் இருப்பதால், மாதத்தை மாற்றி மாற்றி போட்டு டைம் பாஸில் ஆர்டிகல் எழுதி தப்பிக்கும் தினம்.