1898 இல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பறக்க முடியாத தகாஹே பறவை, நியூசிலாந்து காடுகளில் மீண்டும் மறுப்பிறவி எடுத்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தகாஹே என்ற பறக்க முடியாத பெரிய பறவை, நியூசிலாந்தின் தெற்கு தீவின் வனப்பகுதிகளில் மீண்டும் தோன்றியுள்ளது.
தகாஹே என்பது ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் அளவு கொண்ட பறக்க முடியாத பறவையாகும். இது நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனித்துவமான இனமாகும். இந்த பறவையின் முதல் இனமானது சுமார் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு இடப்பெயர்வு செய்தாக கருதப்படுகிறது.
இது குண்டாக மற்றும் வலுவான சிவப்பு மூக்கையும், தடிமனான கால்கள் மற்றும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை இறகுகளைக் கொண்டுள்ளன. இவை பெரிய கோழி அளவு வரை வளரும் மற்றும் 3 கிலோ எடை இருக்கும்.
1898 ஆம் ஆண்டில், இந்த பறவைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏனெனில், தகாஹேவின் குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் ஐரோப்பிய குடியேறியவர்களுக்கு சொந்தமான பூனைகள் மற்றும் எலிகள் போன்ற விலங்குகளின் வருகையால் இந்த இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
"தகாஹே எண்ணிக்கையை அதிகரிக்க பல தசாப்தங்களாக கடின உழைப்புக்குப் பிறகு, இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது" என்று நியூசிலாந்தின் பாதுகாப்புத் துறையின் அதிகாரி டீட்ரே வெர்கோ கூறினார்.
- மு.குபேரன்.