Telangana Telangana
Lifestyle

Telangana : சிறுவனின் காயத்தை Fevi Kwik போட்டு ஒட்டிய மருத்துவர்!

தையல் எதுவும் போடப்படாமல் மகனின் காயம் ஒட்டப்பட்டு இருப்பதால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, மகனை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சு.கலையரசி

பட்டதும் பெவிகுயிக் ஒட்டும் என்பதால் வெட்டுக் காயத்தை கூடவா ஒட்டுவீங்க? புதுவிதமாக சிகிச்சை செய்த மருத்துவர்.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தின் அலம்பூர் நகரைச் சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், கால் தவறி கீழே விழுந்ததில் நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் சிறுவனும் அவனது தந்தையும் அருகிலுள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர் சிறுவனின் காயத்திற்கு தையல் போடாமல் பெவிகுயிக் போட்டு ஒட்டியுள்ளார்.

சிறுவனின் வெட்டுக் காயத்திற்கு அங்குள்ள மருத்துவர் தையல் போட்டு சிகிச்சை செய்யாமல், பட்டதும் ஓட்டக்கூடிய பெவிகுயிக்-கை சிறுவனின் நெற்றியில் உள்ள வெட்டு காயத்தில் ஒட்டியுள்ளார். தையல் எதுவும் போடப்படாமல் மகனின் காயம் ஒட்டப்பட்டு இருப்பதால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, மகனை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

"அங்குள்ள மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்துவிட்டு காயம் பெவிகுயிக் கொண்டு ஒட்டப்பட்டுள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து மட்டுமே குணப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், மகனை மீண்டும் பெவிகுயிக் ஒட்டிய மருத்துவரிடம் அழைத்து சென்ற சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, மருத்துவரை திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு வம்சி கிருஷ்ணா புகார் அளித்ததன் அடிப்படையில் அம்மருத்துவரின் ரெயின்போ மருத்துவமனை சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.