திருப்பூரில் பழக்கடை ஒன்றில் உணவு என்று நினைத்து பல நாள்களாக கல்லாவில் இருந்த பணத்தை எலி ஒன்று எடுத்துச் சென்று சேதப்படுத்தாமல் வைத்திருந்த நிகழ்வு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது, கல்லா பெட்டியில் வைக்கும் பணம் காணாமல் போய்க் கொண்டே இருந்துள்ளது. பகல் நேரத்தில் கல்லா பெட்டியில் வைக்கும் அப்படியே இருக்கும் நிலையில், இரவு நேரத்தில் வைக்கும் பணம் மட்டும் காணாமல் போனது மகேஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால், 10, 20 ரூபாய் நோட்டுகளை வைத்து பார்த்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் காணாமல் போயுள்ளது. இதனால், கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்தார். செவ்வாய்க்கிழமை கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் வழக்கம்போல் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, அதிகாலை நான்கு மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வரும் எலி ஒன்று கல்லா பெட்டியில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.