Tomato  Tomato
Lifestyle

Tomato Price : தட்டு நிறைய தக்காளிப் பழம் - வியக்க வைத்த ஆடி சீர்வரிசை!

டைம்பாஸ் அட்மின்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியில் சமீபத்தில் திருமணமான கனிஷ்குமார் - லீலா பிரியா என்ற தம்பதியருக்குப் பெண் வீட்டார் ஆடி மாத சீர்வரிசை வழங்கினர்.

அதில், ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவையுடன் தட்டு நிறைய தக்காளிப் பழங்களையும் மாமியார் வீட்டார் வைத்திருந்ததைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் ஆச்சர்யத்தில் வியந்தனர்.- லோகேஸ்வரன்

தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இந்த தக்காளி சீர் அப்பகுதி மக்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது. மேலும், இந்த தக்காளி சீர் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- லோகேஸ்வரன்.