Uber Driver Uber Driver
Lifestyle

Wifi, முதலுதவி, Snacks, Tissue என எல்லாம் இலவசம் - அசத்தும் Uber Driver !

வாசனை திரவியம், குடை, டூத்பிக் மற்றும் டிஷ்யூக்கள் போன்றவற்றுடன், வைஃபை வசதியையும் அந்த Uber காரில் செய்துள்ளார்.

சு.கலையரசி

டெல்லியில் uber டிரைவர் ஒருவர் தனது வண்டியில் பல சொகுசு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார். 48 வயதான அப்துல் காதர் என்பவர் தனது டாக்ஸியில் வரும் பயணிகளுக்காக பல வசதிகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளார். காதரின் வண்டியில் செல்பவர்களின் அவசர தேவைக்காக முதலுதவி, சிற்றுண்டி, தண்ணீர் போன்ற அனைத்தையும் இலவசமாகப் பெறலாம்.

மேலும் வாசனை திரவியம், குடை, டூத்பிக் மற்றும் டிஷ்யூக்கள் போன்றவற்றுடன், வைஃபை வசதியையும் அந்த Uber காரில் செய்துள்ளார். ஒவ்வொரு பொருளையும் அடையாளம் காணும் விதமாக லேபிள் ஒட்டி பொருட்கள் இருக்கைகளுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வண்டியில் பயணம் செய்த ஷியாம்லால் யாதவ் என்பவர் அப்துல் காதரின் கார் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இவருடைய கார் வசதிகளையும் பயணத்தின் சுவாரசியங்களையும் பகிர்ந்துள்ளார்.

கையால் எழுதப்பட்ட பலகையில் வைஃபை கடவுச்சொல் மற்றும் வண்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக ஒரு டைரியையும் கூட அந்த வண்டியில் வைத்துள்ளார்.

அப்துல் காதர், "என் வண்டியில் கடந்த 7 ஆண்டுகளில் எந்த சவாரியும் ரத்து செய்யப்படவில்லை" என்று பயணம் செய்த ஷியாம்லால் யாதவிடம் டாக்ஸி டிரைவர் கூறியுள்ளார்.

இந்த போஸ்டிற்கு பலர் "டெல்லியில் அவருடைய வண்டியில் நானும் பயணம் செய்திருக்கிறேன், அவருடைய வேலையை அவர் நேசிக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று, தொழிலில் அக்கறை கொண்டவர்" என்ற பல கமெண்டுகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.