Buffalo  Buffalo
Lifestyle

Buffalo : ஒரு எருமைக்கு சொந்தம் கொண்டாடிய 2 பேர் - இரவில் நடந்த பாசப் போராட்டம் !

எருமை மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறதோ அவருக்கே எருமை மாடு சொந்தம் என ஒரு பாச டெஸ்ட்டை வைத்து தீர்ப்பு வழங்க போலீஸார் முடிவு செய்தனர்.

டைம்பாஸ் அட்மின்

கடலூர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருடுபோன தனது எருமை மாட்டை, பழனிவேல் என்பவர் பிடித்து வைத்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், தனது உறவினரிடம் வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக பழனிவேல் கூறினார்.

ஒரே எருமை மாட்டிற்கு இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் என்ன செய்வது என தெரியாமல் போலீசார் குழப்பமடைந்தனர். மாட்டுக்கு டெஸ்ட் வைத்து பிரச்னையை தீர்த்து வைக்க முடிவு செய்தனர்.

எருமை மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறதோ அவருக்கே எருமை மாடு சொந்தம் என ஒரு பாச டெஸ்ட்டை வைத்து தீர்ப்பு வழங்க முடிவு செய்தனர்.

பாச போட்டி தொடங்கிய போது, எருமை மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் போலீசார் குழப்பமடைந்தனர். அதன்பின் பழனிவேல் சைகை செய்த உடன், மாடு அவருடன் சென்றது. அதனால், பழனிவேல் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்பட்டார். எருமை மாடும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் புகார்தாரர் தீபா விரக்தி அடைந்தார்.