Valentine Week TIMEPASS
Lifestyle

Valentine Week 2023 : ஓ இப்படிதான் Propose Day தொடங்குச்சா!

1816 இல் இளவரசி சார்லோட்டின் வருங்கால கணவருக்கு ப்ரபோஸ் செய்தபோது, பெண்கள் ப்ரப்போஸ் செய்வதா என கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

சு.கலையரசி

காதலர் வார கொண்டாட்டத்தின் இரண்டாம் நாள் பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது.

இந்த ப்ரொபோஸ் டே என்பது கிமு 500 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் இந்த ப்ரபோஸ் என்பது திருமணம் செய்து கொள்கிறாயா என்ற அர்த்தத்தில் திருமணம் வரை கொண்டு செல்லும்.

1477இல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் என்பவர் பர்கண்டி மேரிக்கு வைர மோதிரம் அணிந்து ப்ரபோஸ் செய்தார். அன்றைய காலத்தில் வைர மோதிரத்தை வைத்து ப்ரபோஸ் செய்வது என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

1816 இல் இளவரசி சார்லோட்டின் வருங்கால கணவருக்கு ப்ரபோஸ் செய்தபோது பெண்கள் ப்ரப்போஸ் செய்வதா? என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆண் பெண் யார் வேண்டுமானாலும் ப்ரபோஸ் செய்யலாம் என்றானது.

1839யில் இங்கிலாந்து ராணி விக்டோரியா இளவரசர் ஆல்பர்ட்டிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரபோஸ் செய்தார்.

இந்த ப்ரபோஸ் டேவில் பல வகை உள்ளது. மெழுகுவர்த்தி ப்ரொபோசல், பீச் ப்ரோபோசல், அன்பாக்சிங் ப்ரோபோசல், நாங்கள் முதலில் சந்தித்த ப்ரோபோசல் (சந்தித்த நாளை நினைவு கூர்ந்து ப்ரபோஸ் செய்வது) மற்றும் பல தனித்துவமான ஸ்டைல்களையும் பயன்படுத்தி ப்ரபோஸ் செய்து வருகின்றனர்.

இப்படியாக ப்ரோபோஸ் டே கொண்டாட்டம் பல ஆண்டுகளாக பிரபலமாகி வருகிறது, இப்போது பல நாடுகளில் காதலர்களால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.