விசித்திர மரணங்கள் Timepass
Lifestyle

விசித்திர மரணங்கள் - ஒரு லிஸ்ட்

கம்மாய் திமிங்கலம்

‘எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது’ என்ற ரஜினியின் பன்ச் டயலாக்குக்கு உண்மையிலேயே பொருத்தமானது மரணம்தான். உலகமெங்கும் நடந்த சில வினோதமான மரணங்கள் இவை.

டேனி வன்ஸாண்ட்

2013 பிப்ரவரியில் அமெரிக்காவின் ஒக்கலொகாமா மாகாணத்தில் டேனி வன்ஸாண்ட் என்பவர் அவரது வீட்டு ஹாலில் அமர்ந்தபடியே எரிந்துபோயிருந்தார்.

விருந்துக்குப் போயிருந்த குடும்பத்தினர் வந்து கதவைத் தட்டியும் திறக்கவில்லை என்றதும் உடைத்து நுழைந்துள்ளனர்.

டி.வி ஓடிக்கொண்டிருக்க, அனைத்துப் பொருட்களும் அப்படியே இருக்க, டேனி மட்டும் எரிந்துபோயிருக்கிறார்.

போலீஸும் தலைகீழாய் நின்றுபார்த்தும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவருக்குக் கீழே இருந்த மேட்கூட எரியாமல் இருந்திருக்கிறது.

மாக் வொல்போர்ட்

இது நடந்தது வெர்ஜினியாவில்... அந்தப் பகுதியில் பாம்புப் பாதிரியார் மாக் வொல்போர்ட் ரொம்ப ஃபேமஸ். சர்ச் பிரசங்கங்களுக்குக் கொடிய விஷமுள்ள பாம்பினை எடுத்துவந்து கையில் வைத்துக்கொண்டே பிரார்த்திப்பாராம்.

கிறிஸ்துவத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பாம்பு தீண்டாது, தீண்டினாலும் விஷம் ஏறாது என்று உறுதியாக நம்பி வந்தாராம்.

அதை வலியுறுத்தத்தான் எப்போதும் பாம்புடனே கூட்டங்களுக்கு வரும் அவரை அந்தப் பாம்பு தொடையில் கடித்துவிட்டது.

விசித்திர மரணங்கள்

உடனே பிரேயர் செய்து விஷத்தில் இருந்து மீள்கிறேன் என்று அறைக்குள் போனவர் வரவே இல்லை. போலீஸ் வந்து பார்க்கும்போது இறந்துகிடந்தாராம் பாம்புப் பாதிரியார்.