England  England
Lifestyle

England : திருடனை பிடிக்க சிறுவனின் சைக்கிளை கடன் வாங்கிய பெண் போலீஸ் !

டைம்பாஸ் அட்மின்

பி.சி.ஹாரியட் டெய்லர் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் காவலாளி, கோஸ்போர்ட் நகரம் வழியாக 47 வயதான திருடனை துரத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பிடிக்க தனக்கு ஒரு சைக்கிள் தேவை என்பதை உணர்ந்த அந்த காவலர், ஒயிட் லயன் வாக் பகுதியில் ஜேக் என்னும் சிறுவனிடம் சென்று, தனக்கு உன்னுடைய சைக்கிள் கடனாக தருமாறும், அந்த சைக்கிளை மீண்டும் தந்து விடுவதாகும் கூறி உள்ளார்.

அந்நேரத்தில் சற்று திகைத்துப் போனதாகவும், பிறகு தனது நீல நிற சைக்கிளை அந்தக் காவலாளிக்கு கடனாக தந்ததாகவும் அச்சிறுவன் கோஸ்போர்ட் நகர செய்தி தொடர்பாளிடம் கூறியிருக்கிறான்.

பிறகு திருட்டு, வழிப்பறி ஆகிய குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த அந்த திருடனை அந்த சைக்கிளின் உதவியால் துரத்திப் பிடித்து கைது செய்துள்ளார் அந்த காவலர்.

பிறகு, அந்த பெண் காவலர் சைக்கிளை அச்சிறுவனிடம் மீண்டும் திரும்பி கொடுத்து நன்றி தெரிவித்து, நீயும் உனது சைக்கிளும் எங்களுக்கு பெரிய உதவியாய் இருந்ததாகவும் கூறினார். பிறகு அச்சிறுவனிடம் அந்தப் பெண் காவலாளி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இங்கிலாந்து பெண் காவலர் சிறுவனிடம் சைக்கிளை கடன் வாங்கி திருடனைத் துரத்தி பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மக்கள் தரப்பில் அச்சிறுவனுக்கு மிகுந்த பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- அ. சரண்.