World Cup  timepass
Lifestyle

World Cup 2023 : Matchகளை மாற்றிய Catchகளின் குட்டி ஸ்டோரி - உலககோப்பை ரீவைண்ட்|Epi 5

உபயம் கிப்ஸ் விட்ட ஒரு அதிமுக்கிய கேட்ச். அத அவரு பிடிச்சுருந்தா எல்லாமே மாறி சரித்திரமே வேறுவிதமாக் கூட எழுதப்பட்டு இருக்கலாம். ஹீரோவும் நானே, வில்லனும் நானேனு கிப்ஸ் அன்னைக்குக் காட்டினாரு.

Ayyappan

கேட்சுகள் மேட்சோட முடிவையே மாத்தக்கூடிய காரணிகள். இதனால பல கோப்பைகளே கை மாறியிருக்கு. 1999 உலகக்கோப்பைல நடந்த அப்படியொரு குட்டி ஸ்டோரிதான் இது.

நடப்பு உலகக்கோப்பைல இந்தியா ஆடுற போட்டிகளோட முடிவுகளுக்குக் கொடுக்கப்படற அதே முக்கியத்துவம் போட்டி முடிஞ்ச பிறகு ஃபீல்டிங் கோச் திலீப்பால கொடுக்கப்படற சிறந்த ஃபீல்டருக்கான மெடலுக்கும் இருக்கு.

உலகக்கோப்பைக்கு முன்னாடி ஐந்துக்கு ஒரு கேட்ச என்ற விகிதத்துல சமீபகாலத்துல இந்திய அணி விட்டுட்டு இருந்தது. அத மாத்தி ஃபீல்டர்கள துடிப்போட ஆடவைக்கறதுக்கான வழிமுறைகள்ல ஒன்னா திலீப் இத கைல எடுக்க, அதுக்கு நல்ல பலனும் இருக்கு, போதாக்குறைக்கு டிரெஸ்ஸிங் ரூம் மூடையே அது வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போய் அவங்களுக்கு உள்ளான பிணைப்பையும் கூட்டுது.

பெரிய டோர்ணமெண்ட்கள்ல இவையெல்லாம் ரொம்ப முக்கியம். சரி இப்போ 1999 கதைக்கு வரலாம். ஆஸ்திரேலியான்ற அக்னிப் பறவையினை விட்டு வச்சா என்ன ஆகும்னு தென்னாப்பிரிக்கா புரிஞ்சுக்கிட்ட போட்டி.

99-ம் ஆண்டு உலகக்கோப்பைல செமி ஃபைனல்ல ஆலன் டொனால்டோட ரன்அவுட் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமா மாறி அவங்கள ஃபைனலுக்கு தரை இறக்குச்சுன்னு ஏற்கனவே பார்த்தோம். ஆனா அந்த செமி ஃபைனலுக்கு முந்தைய லெவல்லயும் தென்னாப்ரிக்கா தன்னை அறியாமல் தனக்கான முடிவுரைய எழுதியிருந்தது.

எழுத்தாணி உபயம் கிப்ஸ் விட்ட ஒரு அதிமுக்கிய கேட்ச். அத அவரு பிடிச்சுருந்தா எல்லாமே மாறி சரித்திரமே வேறுவிதமாக் கூட எழுதப்பட்டு இருக்கலாம். ஹீரோவும் நானே, வில்லனும் நானேனு கிப்ஸ் அன்னைக்குக் காட்டினாரு.

முதல்ல பேட்டிங் பண்ண தென்னாப்பிரிக்கா 271 ரன்களைக் குவிச்சுருந்தது. சாட்சாத் கிப்ஸோட செஞ்சுரிதான் அந்தளவு ஸ்கோர் வருவதற்குக் காரணம். பெரிய பவுண்டரிகள் இருந்த அந்த காலகட்டத்தில் எல்லாம் இதுவே பெரிய ஸ்கோர்தான். ஆஸ்திரேலியாவுக்கு இது Do or Die மேட்ச். ஆனா தென்னாப்பிரிக்கா தான் வின்னிங் டிராக்ல ஓடிட்டு இருந்துச்சு.

12 ஓவர்களுக்கு உள்ளேயே 48 ரன்கள மட்டும் கொடுத்து மூணு விக்கெட்டுகள எடுத்துட்டாங்க. ஆனா ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்துச்சு. அதுக்கு மேல விக்கெட் விடாம 30 ஓவர்களுக்கு 149 ரன்கள் வரை கொண்டு வந்துட்டாங்க பாண்டிங்கும் ஸ்டீவ் வாக்கும். ஆனா அதுக்கு அடுத்த ஓவர்ல ஒரு சின்ன சான்ஸ் தென்னாப்பிரிக்காவுக்குக் கிடைச்சது.

ஸ்டீவ் வாக் அடிச்ச பந்து பிடிச்சுக்கோனு கிப்ஸ் கிட்ட தேடி வந்தது, ஆனா அதை அவர் கோட்டை விட்டுட்டாரு. விளைவு, ஸ்டீவ் வாக்குக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைச்சது, ஆஸ்திரேலியாவுக்கும்தான். ஒருவேளை அவரோட விக்கெட் விழுந்திருந்தா 114 பந்துகள்ல 120 ரன்கள் தேவைன்ற நிலைல இருந்த ஆஸ்திரேலியா மேல பிரஸர் பில்ட் ஆகியிருக்கும். ஆலன் டொனால்ட், பொல்லாக், குளுசினரைக் கொண்ட தென்னாப்ரிக்க பௌலிங் யூனிட் டெத்ஓவர்கள்ல எழ விடாமக்கூட ஆஸ்திரேலியாவ அடிச்சுருக்கும்.

அது நடந்து அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறாம இருந்திருந்தா அந்த ரன்அவுட் களேபரம், போட்டி டை ஆனது, முந்தைய லெவல்ல வின் பண்ண கணக்குல ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போன்ற வரிசையான சம்பவங்கள் நடந்தேறியிருக்காது, தென்னாப்பிரிக்காவும் தப்பிப் பிழைச்சுருக்கும்.

தனக்கான ஆப்பினை தென்னாப்பிரிக்கா வேண்டி விரும்பி அடித்துக் கொள்ள அதற்கு முழுமுதல் காரணம் ஆனது கிப்ஸ் விட்ட கேட்ச். இன்றைய தேதி வரை எப்போதெல்லாம் கோப்பைகள் இல்லாத துரதிர்ஷ்டம் அவர்களைத் துரத்துகிறதோ அப்போதெல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு நினைவு வருவதும் இதுதான், அன்று கிப்ஸ் அடித்த சதத்தை விடவும் இவ்வளவு ஏன் ஸ்டீவ் வாக் அடித்த சதத்தை விடவும் அதிகமாகப் பேசப்படுவதும் இந்த கேட்ச் டிராப்தான்.