Rachin Ravindra timepass
Lifestyle

World Cup 2023 : Rahul + Sachin = Rachin - நியூசிலாந்து இளம் வீரர் Rachin Ravindra வின் கதை !

டைம்பாஸ் அட்மின்

உலகக் கோப்பையின் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியில் முதல் இந்தியா, ஆஸ்திரேலியா வரையிலான சாம்பியான் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், இந்த உலக் கோப்பை தொடரில் தனி ஒருவனாக கலக்கி வரும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர்..! யார் இந்த ரச்சின் ரவீந்திரா ?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரச்சின் ரவீந்திராவின் குடும்பம், தந்தையின் தொழில் தேவைக்காக பெங்களூரில் இருந்து 1990 ஆம் ஆண்டு  நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது, ரச்சின் ரவீந்திரா 18 நவம்பர், 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். 

இவரின் பெற்றோர்களுக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தால், தாங்கள் விரும்பும் இந்திய கிரிக்கெட் வீரர்களான ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரைச் சூட்ட விரும்பினர். எனவே ராகுல் டிராவிட்டின் பெயரிலிருந்தும் 'ரா'- வையும், சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து 'ச்சின்' என்பதையும் எடுத்து ரச்சின் ரவீந்திரா என்று பெயர் வைத்தனர். இவரின் ஆட்டதைப் பார்த்தே, இவரின் பெற்றோர்களுக்கு இவருக்கு சரியான பெயர்தான் வைத்துள்ளார்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். 

மேலும் இவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரில் வாழ்ந்த காலங்களில் கிரிக்கெட் பிளேயராக இருந்துள்ளார். எனவே நியூசிலாந்துக்கு சென்ற பின்னர், தனது மகனை பெரிய கிரிக்கெட் பிளேயராக மற்ற வேண்டும் என்ற ஆசையில் ரச்சினுக்கு பயிற்சி அளிக்க சொந்தமாக ஒரு ஹட் ஹாக்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பையும் நிறுவினார். எனவே, ரச்சினுடைய முதல் பயிற்சியாளர் அவரின் தந்தை என்றால் மிகையாகாது. மேலும் ரச்சினுக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம், அவரின் தந்தையின் சிறந்த பயிற்சி ரச்சினை ஒரு சிறந்த வீரராக மாற்றியது.

இதன் காரணமாக நியூசிலாந்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் சென்று கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதுமட்டுமல்ல இந்திய பிட்சுகளிலும் அதிகம் விளையாடியுள்ளார் ரச்சின். அவர் 2011 ஆம் ஆண்டு முதல், ஹட் ஹாக்ஸ் அணிக்காக ஆண்டுதோறும் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் அனந்த்பூர் போன்ற பல இந்திய நகரங்களுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் விளையாடியுள்ளார்.

இதனால் வெவ்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் கிடைத்தது. இதை தவிர தனது தந்தை இந்தியா செல்லும்போதுலாம், அவருடன் சென்று தந்தையின் நெருங்கிய நண்பரான முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் அறிவுரை பெற்றார். இதன் மூலம் அவரின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டார். இவர் ஒருமுறை வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது, இவர் ஆட்டதை கண்டு வியந்த அணியின் பயிற்சியாளர் க்ளென் பொக்னால், இவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா தேர்வுசெய்யப்பட்டார். மேலும், 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் விளையாடினார். இரு உலகக் கோப்பையிலும் அவரின் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், உலகக் கோப்பை முடிந்த கையோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ரச்சினை அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறிவித்தது.

பின்னர், 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தொடருக்கான நியூசிலாந்து சர்வதே அணியில் கால் பதித்தார் ரச்சின். அந்த தொடரின் முதல் டி20 போட்டியில் விளையாடிய அவர் 17 பந்துகளில் 33 ரன்கள் உட்பட ஒரு விக்கெட்டையும் விழ்த்தினார். அதே ஆண்டில் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் ரச்சின் இடம் பிடித்தார்.

இந்த தொடரின் முதல் போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்து அணி விக்கெட் மேல் விக்கெட் விழுந்து தடுமாறியபோது, ரச்சின் முதல் போட்டி என்ற பதட்டமே இல்லாமல் பொறுமையாக விளையாடிவர், விக்கெட் விட்டாமல் 91 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் தோல்வியைத் தவிர்த்து போட்டியை டிராவில் முடித்தார்.  அந்த போட்டிக்கு பிறகு பேசிய ரச்சின், லோவர் ஆர்டரில், ஆடினாலும் ஒப்பனராக ஆடவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். 

அவர் விரும்பியவாரே, தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் ஓப்பனராக விளையாடி வருகிறார். அவரின் நம்பிக்கைக்கு தகுந்தவாறு, இந்த தொடரில் அவர் விளையாடிய 7 போட்டிகளில் 415 ரன்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து அணிக்காக ஒரு பெரிய சாதனையை முறியடிக்க உள்ளார்.

அது உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடிக்கவுள்ள சாதனையே ஆகும். இதற்கு முன்னர் அணியின் கேன் வில்லியம்சன் 10 போட்டிகளில் 578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். தற்போது ரச்சின் 6 போட்டிகளில், 406 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க ரச்சினுக்கு 2 போட்டிகளில் 165 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே அவர் இந்த சாதனையை முறியடிப்பார என்று பொருந்ததிருந்து பார்ப்போம்.


- மு.குபேரன்.