பேட்களும் பால்களும் மட்டுமே மேட்ச் வின்னிங் வழிகள் அல்ல. சமயத்தில அற்புதமான ஃபீல்டிங்கும் அத செஞ்சு முடிக்கும்.
தடுக்கப்படுற ரன்கள் தன் அணியின் கணக்குல எடுக்கப்படற ரன்கள்னு சொல்லப்படுவதுண்டு. ஒரு விக்கெட்டும், தடுத்து நிறுத்தப்படற சில பவுண்டரிகளும் போட்டியோட போக்கையே மாத்திடும். அதையும் தாண்டி ஆட்டத்த இன்னமும் சுவாரஸ்யம் ஆக்கும். உலகக்கோப்பை வரலாற்றில் நடந்த கவனத்தைக் கவர்ந்த இரு ஃபீல்டிங் முயற்சிகள் பத்திதான் பார்க்கப் போறோம்.
சிறுத்தை என்பார் பாயும் என்பார் ஜான்டி ரோட்ஸின் ஃபீல்டிங்கைப் பாராதவர். அந்த அளவுக்கு ஃபீல்டிங்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது அவருதான். 1992 உலகக்கோப்பைல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான போட்டிலேயே கிரேக் மெக்டெர்மாட்டை ரன் அவுட் பண்ணி வெறித்தனம் காட்டியிருந்தாரு ஜான்டி ரோட்ஸ். ஆனா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டில அவரு பண்ண ரன் அவுட் இன்னும் எத்தனை வருஷமானாலும் கொண்டாடப்படும்.
பாகிஸ்தான் அந்தப் போட்டில 211 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவ சுருட்டிருச்சு. ஆனாலும் பௌலிங் யூனிட் அசத்திட்டு இருந்தது. அப்போ இன்சமாமும் இம்ரான் கானும் களத்துல இருந்தாங்க. பந்தை மிட் விக்கெட்ல அடிக்க இன்சமாம் முயல அது பேக்வேர்ட் பாய்ண்ட்ல நகர்ந்துடுச்சு. சரி அங்க இருந்து ரன் அவுட் பண்றது கஷ்டம்னு அவரு ஓட, இன்சமாம் ரொம்ப கேர்ஃபுல்லா வர மாட்டேன் போ ன்னு திரும்ப அனுப்ப மறுபடியும் ஸ்ட்ரைக்குக்கு வர இன்சமாம் ஓடுனாரு.
பொதுவாகவே இன்சமாம் Lazy Runner தான். ஆனால் கூட அந்தப் போட்டியில வேகமாதான் ஓடுனாரு. ஆனா ஜான்டி ரோட்ஸ் பந்த ஸ்டம்ப நோக்கி எறியல. தானே அதை நோக்கி டைவ் அடிச்சு ஸ்டம்ப உடைச்சுட்டாரு. இந்த ரன் அவுட் தான் ஜான்டி ரோட்ஸ பறக்கும் சூப்பர் மேனாகவும், ரெய்னா, யுவ்ராஜ் போன்றவர்களுக்கு எல்லாம் அவர இன்ஸ்பிரேஷனாகவும் மாத்துச்சு. "Is it a bird or a plane"னு சில வருஷங்களுக்கு முன்பாக ஐசிசி கூட ட்வீட் போட்டுச்சு.
ஜான்டி ரோட்ஸ் போல ஃபிட்னஸ் இல்லை, சொல்லப் போனா அவருடைய பருத்த உடலுக்காகவும் பார்க்குற ஜெயிலர்ன்ற வேலைக்காகவும்தான் பெர்முடா அணியோட லீவராக் நியூஸ் ஹெட்லைன அலங்கரிச்சாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரான போட்டியில அவரோட ஒரு கேட்ச் வீடியோ யூ ட்யூப்ல இன்னைக்கும் திரும்பத் திரும்பப் பார்க்கப்படுது. மோசமான தோல்விய தொடர்ல சந்திச்ச இந்தியா பெர்முடாகூட வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில உத்தப்பா தான் சந்திச்ச பந்த ஸ்கொயர் கட்டாக்க முயன்றாரு. ஆனா பந்து அவரை ஏமாத்தி எட்ஜ் வாங்கி ஸ்லிப்புக்கு பாய்ந்தது. ஸ்லிப்ல நின்ன லீவாக்குக்கு ரைட்ல பந்து நகர்ந்தது. அத அவரு பிடிப்பார்னு அவர் டீம் மேட்ஸே நினைச்சுருப்பாங்க. ஆனா கொஞ்சமும் யோசிக்காம பந்தை வலது புறமா பாஞ்சு ஒருகைல அற்புதமா கேட்ச் பிடிச்சாரு லீவராக்.
மொத்த ஸ்டேடியமும் கமெண்ட்ரி பாக்ஸும் போட்ட ஆர்ப்பரிப்பு ஓயவே பல நிமிஷங்கள் ஆச்சு. இப்படிப்பட்ட டெடிகேஷன்தான் சின்ன அணிகள்னு ஒதுக்க முடியாதபடி அவங்க மேல வெளிச்சத்த பாய வைக்குது. பௌலர் சந்தோஷத்துல கண்ணீர் விட லீவராக் ஆடியன்ஸுக்கு பறக்கும் முத்தங்கள அனுப்பிட்டு இருந்தாரு.
ஏற்கனவே சொன்ன மாதிரி இன்னிங்ஸ்கள், மேஜிக் ஸ்பெல்களுக்கு இணையாக எப்பவும் இப்படிப்பட்ட ஃபீல்டிங் முயற்சிகளும் பாராட்டப்படும்.....