நீள கூந்தல் டைம்பாஸ்
Lifestyle

'55 அடி 7 அங்குலம் நீள கூந்தல்' - கின்னஸ் சாதனை பெண் ஆஷா ஜுலு

மேல்மாடியில் நின்றிருந்த ஆஷாவின் தலைமுடி, கீழேயுள்ள ஃப்ளோர் வரைக்கும் தொங்கிக்கொண்டிருக்க, கொதித் தெழுந்த அபார்ட்மென்ட்காரர்கள் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

கம்மாய் திமிங்கலம்

‘‘அடிக்கடி முடி உதிர்கிறதா? இதோ... அமேசான் காடுகளில் உள்ள அற்புத மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கூந்தல் தைலம்.’’ டைப் விளம்பரங்களைப் பார்த்துப் பெருமூச்சுவிடும் ஆட்கள் நாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஆஷா ஜுலு மண்டேலா என்கிற பெண், உலகத்திலேயே நீஈஈஈஈ...ளமான கூந்தல்காரர்! அம்மணிக்கு 64 வயது.

கூந்தல் மீதுள்ள காதலால், அதைப் பராமரித்து, வளர்த்து, இந்தச் சாதனைப் பட்டியலில் இணைத்துக் கொள்ள இவர் எடுத்துக்கொண்ட காலம் 5 ஆண்டுகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்மாடியில் நின்றிருந்த ஆஷாவின் தலைமுடி, கீழே இருக்கும் ஃப்ளோர் வரைக்கும் தொங்கிக்கொண்டிருக்க, கொதித் தெழுந்த அபார்ட்மென்ட்காரர்கள் திட்டித் தீர்த்து அதகளம் செய்திருக்கிறார்கள்.

எதையும் சட்டை செய்யாமல், ‘ஜஸ்ட் லைக் தட்’டாகத் தட்டிவிட்டுச் சென்ற ஆஷா, 2008-ல் ‘நீளமான கூந்தல் கொண்ட’ பெண்ணாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இவரே சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். ‘ஆனா, இம்புட்டு முடி இருக்கிறது உடம்புக்கு நல்லது இல்லை’ என டாக்டர்கள் எச்சரித்தாலும், ‘வெட்ட மனசில்லை... விட்டுடுங்க ப்ளீஸ்!’ என மறுத்துவிட்டார் ஆஷா.

அது சரி முடியோட நீளம் என்னனு தெரிஞ்சிக்கணுமா... 55 அடி, 7 அங்குலம். ஆத்தி!