மஞ்சள் மனிதன் 
Lifestyle

'மஞ்சளோ மஞ்சள்' - யார் இந்த மஞ்சள் மனிதன்?

சிரியா நாட்டில் ஒருத்தர் ட்ரெஸ்ல இருந்து எந்த பொருள் யூஸ் பண்ணினாலும் அது மஞ்சள் கலராவே இருக்குதாம். அந்தக் கலரை அவர் இவ்ளோ லைக் பண்ண காரணம் என்ன வாங்க பாக்கலாம்.

Zulfihar Ali

நாமெல்லாம் ஒரு ஜீன்ஸ ஒருவாரம் போட்டாலும், சட்டைய ஒரு நாளைக்கு ஒரு கலர்லயாவது போடுவோம். ஆனா, சிரியா நாட்டில் ஒருத்தர் ட்ரெஸ்ல இருந்து எந்த பொருள் யூஸ் பண்ணினாலும் அது மஞ்சள் கலராவே இருக்குதாம். அந்தக் கலரை அவர் இவ்ளோ லைக் பண்ண காரணம் என்ன வாங்க பாக்கலாம்.

மஞ்சக்காட்டு மைனாவா வாழ்ற அந்த மனுஷன் பேரு அபு ஜகோர். சிரியா நாட்டில் அலெப்போ நகரத்துல வாழ்ந்துட்டு வர்றார். கடந்த 40 வருசமா அவர் இப்படி மஞ்சள் கலர் மேல பைத்தியமா திரியிறாராம்.

அப்படி என்னென்ன பொருட்களை அவர் மஞ்சள் கலர்ல யூஸ் பண்றார்னு பார்த்தா அவரோட பேண்ட், சட்டை, டை, ஷூ, தொப்பி, வாட்ச், கார், செல்போன், அவ்ளோ ஏன் "நான் யூஸ் பண்ற அண்டர்வேர் முதற்கொண்டு மஞ்சள் கலர்தேன்"னு அடிச்சு சொல்லிருக்கார்.

"இந்த உலகத்துல என்னைத் தவிர மஞ்சள் கலரை இப்படி விரும்புற இன்னொருத்தர் இருக்கவே முடியாது"னு சொல்ற இவரை அலெப்போ நகரில் அத்தனை பேருக்கும் தெரியுமாம். இவர் தெருவுல இறங்கி நடந்தாலே இவரை பார்க்க ஒரு தனி கூட்டம் கூடுதாம். அவர்கூட மக்கள் செஃல்பியும் எடுத்துகிறாங்களாம்.

"உங்களுக்கு ஏன் இந்த நிறத்தை இவ்ளோ பிடிச்சிருக்கு?"ன்னு கேட்டதுக்கு "மஞ்சள் ஒரு மகிழ்ச்சியின் நிறம். அந்தக் நிறம் எனக்கு எப்போதும் ஒரு சந்தோசத்தைக் கொடுக்குது"னு சொல்லிருக்கார். இப்படிப்பட்ட மனுசன நாம கெளரவப்படுத்தியே ஆகணும்னு முடிவு பண்ணின மக்கள், அந்த ஏரியாவில் இவருக்கு ஒரு சிலையும் வெச்சிருக்காங்க. அதுபோக இப்படி வித்யாசமான ஆளா இருக்காரேன்னு கின்னஸ் புத்தகத்துலயும் இவர் பெயர் இடம்பிடிச்சிருக்கு. ஒரே ஒரு மஞ்சக்கலரை வெச்சு என்னென்ன பண்றார் பாருங்க.

- ஜுல்பிஹார் அலி