MrBeast
MrBeast  டைம்பாஸ்
Lifestyle

$1 Vs $100,000,000 Car : Youtube ஐ கலக்கும் MrBeast இன் வைரல் வீடியோ !

டைம்பாஸ் அட்மின்

சாகசம் மற்றும் சவால்களின் மன்னனாக திகழ்ந்த ஜிம்மி டொனால்ட்சன் "மிஸ்டர் பீஸ்ட்" என்று அழைக்கப்படுகிறார். இவர் 50 மணிநேரம் உயிருடன் புதைந்திருப்பது, 30 நாட்கள் உணவு இல்லாமல் இருப்பது போன்ற வினோத வீடியோக்களை உருவாக்குவதில் புகழ்பெற்றதால் யூடியூப்பில் அதிகம் சப்ஸ்கிரைப்பர்கள் பெற்ற சேனலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

அவ்வகையில் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். கார்கள் குறித்த அனுபவ வீடியோக்களை வெளியிட்டுள்ளார். $1டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 83) பொம்மை காரில் தொடங்கி, மிக விலையுயர்ந்த $100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.815.70 கோடி) விலையுயர்ந்த ஃபெராரி கார் வரை இந்தப் பட்டியலில் உள்ளது. இந்த வீடியோவில் ஓட்டுநர் அனுபவத்தைப் பதிவு செய்தது மட்டுமல்லாமல் அதன் அம்சங்களையும் சோதித்துள்ளார்.

அந்த 16 நிமிட வீடியோவிற்கு $1 vs $100,000,000 கார்கள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. "இந்த கார்கள் ஏன் மிகவும் விலை உயர்ந்தவை என்பதைக் காட்ட நாங்கள் பல வழிகளில் அக்காரைச் சோதிக்க போகிறோம். எங்கள் புதிய வீடியோவிற்கு ஒரு பறக்கும் கார், ஒரு படகு கார் மற்றும் $100,000,000 டாலர் மதிப்புள்ள விலையுயர்ந்த கார் கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை" என்று ஜிம்மி டொனால்ட்சன் கூறியுள்ளார்.

இறுதியாக ஒவ்வொரு விலை வரம்பிலிருந்தும் கார்களை ஓட்டி சோதித்த பிறகு, வீடியோவின் முடிவில் மிஸ்டர்.பீஸ்ட் $100 மில்லியன் ஃபெராரியில் சவாரி செய்வதைக் காண முடிந்தது. ஒரு மாதத்திற்கு $5 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடிக்கும் மேல்) ஜிம்மி டொனால்ட்சன் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

- மு.குபேரன்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr